சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்த பிறகு குற்றங்களும் வெகுவாக அதிகரித்திருக்கின்றன. இதில் அதிக அளவு பெண்கள்தான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் இந்த மோசடி அதிகமாக நடக்கிறது. மும்பை கோரேகாவ் பகுதியில் வசிக்கும் 30 வயது பெண்ணுக்கு இன்ஸ்டாகிராமில் ஒருவர் நட்பு கோரிக்கை அனுப்பியிருந்தார். அந்த நபர் தன்னை ராஜஸ்தான் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் போல் சமூக வலைதளத்தில் காண்பித்திருந்தார். அதாவது ராஜஸ்தான் அரண்மனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருந்தார். அதனைப் பார்த்த மும்பை பெண் அந்த நபரின் நட்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவருடன் பழகி வந்தார்.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

அந்த நபர் மும்பை பெண்ணிடம் தன் பெயர் `புக்ராஜ் தேவாசி’ என்றும், தான் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார். அதோடு அந்தப் பெண்ணை காதலிப்பதாகவும் தெரிவித்தார். அந்தப் பெண்ணும் அவரின் காதலை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அந்தப் பெண்ணிடம் சில புகைப்படங்களை அனுப்பும்படி கேட்டார் புக்ராஜ். அந்தப் பெண்ணும் தனது அந்தரங்க புகைப்படங்களை புக்ராஜூக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்தப் படங்களைக் காட்டி அவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மிரட்டிப் பணம் கேட்டிருக்கிறார் புக்ராஜ்.

அந்தப் பெண்ணும் பயந்து அவர் கேட்டப் பணத்தைக் கொடுத்தார். ஆனால் அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். அந்தப் பெண் ரூ.4,00,000 வரை கொடுத்தார். ஆனாலும் புக்ராஜ் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் வேறு வழியில்லாமல் அந்தப் பெண் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். ஜுகு போலீஸார் வழக்கு பதிவுசெய்து புக்ராஜை கைதுசெய்தனர்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தபோது அதில் ராஜஸ்தான் கோட்டை, ஆடம்பர வாகனங்கள், செக்யூரிட்டி கார்டுகளின் புகைப்படங்கள் அதிக அளவில் இருந்தன. அவரிடம் விசாரணை நடத்தியதில் ராஜஸ்தான் ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் என்று கூறி, இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழவைத்து மிரட்டிப் பணம் பறித்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து அவனை கோர்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล