இது குறித்துப் பேசும் சுரண்டை பகுதி மக்கள், “தென்காசி தொகுதி எம்.எல்.ஏ-வான பழனிநாடாருக்குச் சொந்தமான சேம்பருக்கு சரள் மண் கொண்டுசெல்லப்படுகிறது. கிராமப் பகுதிகளிலுள்ள குளங்களிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்கிறார்கள்.

டிராக்டர், லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்லப்படும்போது சாலைகளில் மிகவும் வேகமாகச் செல்கிறார்கள். குறுகலான கிராமத்துச் சாலைகளில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அதன்படி இன்று கீழ சுரண்டை பகுதியைச் சேர்ந்த ராஜதுரை என்பவரின் நான்கு வயது மகன் ராஜமுகன் மீது டிராக்டர் மோதியதில் அந்த சிறுவன் உயிரிழந்துவிட்டார். மணல் கடத்தல் காரணமாக நடக்கும் இத்தகைய விபத்துகளைத் தடுக்கும் வகையில் தென்காசி மாவட்டக் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.
இந்த நிலையில், தென்காசி எம்.எல்.ஏ-வான பழனிநாடார், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று அங்கு குழுமியிருந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர், தனது சொந்த நிதியிலிருந்து சிறுவனின் பெற்றோருக்கு ஆறு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.
இது குறித்துப் பேசிய பழனிநாடார், “நடந்தது விபத்துதான் என்றபோதிலும் இதை சிலர் அரசியலாக்க முயல்கிறார்கள். அந்த வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இல்லை என்று பொய்யான தகவலைப் பரப்புகிறார்கள். வாகனத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கிறது. அதனால் விபத்துகான காப்பீடு பெற அந்த குடும்பத்துக்கு உதவுவேன். உயிரிழந்த சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.