14% கூடுதலாக மழை!

தமிழகத்தின் ஆண்டு முழுவதும் இயல்பாக 937.50 மி.மீ மழை பெய்கிறது. இதில், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடிய வடகிழக்குப் பருவ மழையில், 448 மி.மீ (48%) மழையளவு கிடைக்கிறது. அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 17-ம் தேதி வரை இயல்பாகப் பெய்ய வேண்டிய 288.3 மி.மீட்டர் அளவைவிட கூடுதலாக 327.9 மி.மீ மழை பெய்துள்ளது. அதாவது, வழக்கத்தைவிட 14% கூடுதலாகப் பெய்துள்ளது.

மூழ்கிய பயிர்கள்

மாவட்ட வாரியாக ஆய்வு செய்தால்,

2 மாவட்டங்களில் இயல்பைவிட 60 சதவிகிதம் கூடுதலாகவும்,

12 மாவட்டங்களில் 20 முதல் 59 சதவிகிதம் கூடுதலாகவும்,

21 மாவட்டங்களில் இயல்பான மழையும் பெய்துள்ளது.

குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் 722.1 மில்லி மீட்டரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 516.7 மில்லி மீட்டரும், கடலூர் மாவட்டத்தில் 485.9 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

கடந்த வாரத்தில் பெய்த இந்தக் கனமழையால் பல மாவட்டங்களில் விளைநிலங்களில் மழைநீர் தேங்கி, நெல் பயிர் உட்பட பல பயிர்கள் நீரில் மூழ்கின. தற்போது நீர் வடிந்து வரும் சமயத்தில், விவசாயிகள் சில முக்கிய பணிகளை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்று வேளாண்மை உழவர் நலத்துறை வலியுறுத்தியுள்ளது. அதன் விவரங்களைப் பார்ப்போம்.   

விவசாயிகள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்

1. விளை நிலங்களில் உள்ள சிறு பாசன மற்றும் வடிநீர் வாய்க்கால்களில் உள்ள, செடி கொடிகளை அகற்றிட வேண்டும்.

2. மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உள்ள அதிகப்படியான நீரை உரிய வடிகால் வசதியை உருவாக்கி வெளியேற்ற வேண்டும்.

3. மழைக்காலங்களில் உரம் இடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிர்த்திட வேண்டும். 

தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

நெல் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

1. மழைநீர் சூழ்ந்துள்ள வயல்களில் உடனடியாக வடிகால் வசதியை ஏற்படுத்தி நீரை வடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நெல் பயிர் நீரில் மூழ்கி இருந்தால், ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது மழை நின்று நீர் வடிந்து வருவதால், ஊட்டச்சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, நீர் வடிந்த பிறகு, தழைச்சத்து வழங்கும் இயற்கை உரங்களை தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும்.

5. மழைக்காலத்தில் புகையான் தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால், வேம்பு சார்ந்த அசாடிராக்டின் 0.03 சதவிகித மருந்தை எக்டருக்கு 1,000 மி.லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

6. தற்போது. மேகமூட்டமாக உள்ளதால், பயிரின் தேவைக்கும் அதிகமாக ரசாயன உரமிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மழை நீரில் மூழ்கிய பயிரைக் காட்டும் விவசாயி

மேலும், விவசாயிகள் இதுதொடர்பாகக் கூடுதல் தகவல் வேண்டும் என்றால், அருகாமையில் உள்ள துறை அலுவலர்களை அணுகலாம் என்று வேளாண்மை உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. பருவ மழையால் பயிர்கள் பாதிக்கப்படும் நேரத்தில் கிராமத்துக்குச் சென்று பயிரைக் கண்காணித்து விவசாயிகளுக்குத் தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்ற வேண்டும் என்று தோட்டக்கலைத்துறையைச் சார்ந்த அலுவலர்களை அரசு அறிவுறுத்தியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล