புதுச்சேரியில், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, தேர்தல் ஆணையம் 200 வாகனங்களை இரு டிராவல்ஸ் நிறுவனங்களிலிலிருந்து வாடகைக்கு எடுத்தனர். அந்த வாகனங்களை தேர்தல் ஆணையம் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு சென்று தேர்தலுக்கு பயன்படுத்தியது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு வாகனங்களுக்கான தொகையை முழுமையாக தரவில்லை என கூறப்படுகிறது. முதலில் பாதித்தொகையை தந்த தேர்தல்துறையானது, மீதி தொகையை தருவதற்கு பல நிபந்தனைகளை விதித்திருக்கிறது எனச் சொல்லப்பட்டது.

குறிப்பாக, ஓட்டுநர்கள் விவரம், வாகனத்தில் பயணித்த அதிகாரிகளின் கையொப்பம் ஆகியவைகளை கேட்டதாக தெரிகிறது. இந்த நிறுவனங்கள் அவர்கள் கேட்ட விவரங்களை,  தேர்தல்துறையிடம் சமர்ப்பித்தும் பாக்கித் தொகையை திருப்பி கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் - புதுவை

தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் – புதுவை

மொத்தமாக ரூ.80 லட்சம் வரை பாக்கி இருந்ததை பற்றி, அப்போதைய தேர்தல் அதிகாரிகள் முதல் ஆளுநர் வரை புகார் தெரிவித்தும் பலன் இல்லாததால் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், தேர்தல்துறை ரூ.80 லட்சம் வரை பாக்கி வைத்திருந்ததால் புதிய ஆட்சியர் அலுவலகம், ரெட்டியார் பாளையத்திலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகங்களை இந்த தொகைக்கு ஈடாக ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது நீதிமன்ற அமீனா நேரில் சென்று புதுச்சேரி ஆட்சியர் அலுவலகம், ரெட்டியார் பாளையம் தேர்தல் ஆணைய அலுவலக கட்டடங்களில் நீதிமன்ற ஜப்தி நோட்டீஸை ஒட்டினார். இந்த சம்பவத்தால் புதுவையில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล