நேபாளம் : நேபாள நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்று இருக்கும் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷேர் பகதூர் தியூபா அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 275 உறுப்பினர்களை கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றன. அந்த வகையில் 110 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த 20-ம் தேதி நடைபெற்றது.

இதன் வாக்கு எண்ணிக்கையானது திங்கள் கிழமை தொடங்கியது. இதில் தாடெல்தூர நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பொறுப்பு பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 25,534 வாக்குகள் பெற்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். நடப்பு தேர்தலில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு எதிராக முன்னாள் மாவோயிஸ்ட் தலைவர் புஷ்ப கமல் தஹல் கூட்டணி அமைத்திருக்கும், போட்டியிட்டிருக்கும் தியூபா 11 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து 46 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *