கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, `இஸ்லாத்துக்கு மாறினால் திருமணம் செய்துகொள்கிறேன்’ என மிரட்டியிருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட சிறுமி இந்து மதத்தைச் சேர்ந்தவராவார். இந்தச் சம்பவம் மண்டியாவின் நாகமங்கலா நகரில் நடந்திருக்கிறது. பின்னர் இந்த விவகாரத்தை அறிந்த சிறுமியின் தந்தை போலீஸில் இது தொடர்பாக புகாரளித்திருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை
சித்திரிப்புப் படம்

பாதிக்கப்பட்ட சிறுமி நவம்பர் 12-13 ஆகிய தேதிகளில் மிகவும் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். அப்போது சிறுமியின் தந்தை என்னவென்று கேட்டிருக்கிறார். பின்னர் நடந்ததைக்கூறிய சிறுமி, நாகமங்கலத்தில் இருந்தபோது யுனாஸ் பாஷா/ஃபயாஸ் அகமது என்ற பெயரில் தன்னுடன் ஒருவர் பேச ஆரம்பித்தார் எனக் கூறியிருக்கிறார். மேலும் அந்த நபர், தனக்கு போன் மற்றும் புதிய சிம் கார்டை அனுப்பியதாகக் கூறிய சிறுமி, தொடர்ந்து அந்த நபர் வாட்ஸ்அப்பில் வீடியோ அழைப்பு மூலம் ஆபாசமாகப் பேசினார் எனக் குற்றம்சாட்டினார். அதைத் தொடர்ந்து, சிறுமியின் அந்தரங்க படங்களைக் காட்டி உடலுறவுகொள்ளுமாறும் தன்னை மிரட்டியதாக அந்தச் சிறுமி தன் பெற்றோரிடத்தில் கூறினார்.

போக்சோ சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞன் கைது!

போக்சோ சட்டத்தின் கீழ் இஸ்லாமிய இளைஞன் கைது!
சித்திரிப்புப் படம்

மேலும், நவம்பர் 10-ம் தேதி பாட்டி வீட்டுக்குச்சென்ற சிறுமியை மிரட்டிய அந்த நபர், குடும்பத்தினர் சாப்பிடும் சாம்பாரில் தூக்க மாத்திரைகளைக் கலக்கச் சொல்லியிருக்கிறார். அடுத்தநாள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, `இஸ்லாத்துக்கு மாறினால் திருமணம் செய்துகொள்கிறேன்’ என சிறுமியிடம் கூறியிருக்கிறார். மேலும், `இது பற்றி வெளியில் கூறினால் உன்னையும், உன் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவேன்’ என்றும் மிரட்டியிருக்கிறார்.

பின்னர் சிறுமியின் தந்தையின் புகாரின்பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார், போக்சோ மற்றும் கர்நாடக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட புதிய மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து அந்த இளைஞரைக் கைதுசெய்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล