தமிழகத்தில் மீண்டும் ‘மெட்ராஸ் ஐ’ பரவுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படுகிறது. வெப்பம், ஈரப்பதமான சூழ்நிலையில் வேகமாக பரவும்.

சென்னையில் 1918ல் புதிய கண்நோய் பரவியது. இது ‘அடினோ’ வைரஸ் மூலம் ஏற்படுகிறது என கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால், ‘மெட்ராஸ் ஐ’ என பெயரிடப்பட்டது. (1969 வரை சென்னை மெட்ராஸ் என அழைக்கப்பட்டது). மருத்துவ துறையில் ‘கன்ஜன்க்டிவிட்டிஸ்’ என அழைக்கின்றனர்.

அறிகுறி என்ன

* கண் சிவப்பது, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் வீக்கம், காலையில் விழிக்கும் போது கண்களை திறக்க கடினமாக இருத்தல். ஒரு கண்ணில் தோன்றி அடுத்த கண்ணுக்கும் பரவும். அரிப்புடன் நீர் வழியும்.

பார்த்தால் பரவுமா

‘மெட்ராஸ் ஐ’ பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவரின் கண்களை நேரடியாக பார்ப்பதால் பரவும் என்பது தவறு. பாதித்தவர் தன் கண்களை தொட்டுவிட்டு பயன்படுத்திய கண்ணாடி, கர்சிப் , துண்டு ,பேனா ,பென்சில், அழிப்பான், பேப்பர் போன்ற பொருட்களை மற்றவர் தொடுவதன் மூலம் பரவும். இதனை தடுக்க கண்ணாடி அணிவது நல்லது. வீட்டிலேயே இருப்பது பாதித்தவருக்கும், மற்றவர்களுக்கும் நல்லது.

என்ன சிகிச்சை

பெரும்பாலும் 2-5 நாளில் தானாகவே குணமாகிவிடும். கண் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது.

அடிக்கடி குளிர்ந்த நீரில் கண்களை கழுவ வேண்டும்.

கண்களை துடைக்க சுத்தமான மெல்லிய துணி பயன்படுத்தலாம்.

அலைபேசி, டிவி, கம்ப்யூட்டர் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล