குஜராத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மது ஸ்ரீவஸ்தவ் மற்றும் இரண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 கட்சித் நிர்வாகிகளை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

வேட்புமனுத் தாக்கல்:

டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கு சுயேட்ச்சை வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்ததற்காக ஏழு பாஜக நிர்வாகிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். ​​டிசம்பர் 5 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டமன்றத் தொகுதிகளில் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும், 12 பா.ஜ.க நிர்வாகிகளை குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் இடைநீக்கம் செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 பேர் நீக்கம்:

News Reels

இரண்டாம் கட்டத்தில் வாக்களிக்கும் 93 இடங்களுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற நவம்பர் 21 கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக நிர்வாகிகள் யாரும் தேர்தல் போட்டியில் இருந்து விலகவில்லை, இதனால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.  வடக்கு மற்றும் மத்திய குஜராத்தின் 11 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் தலைவர்களில் வகோடியாவின் (வதோதரா மாவட்டம்) எம்எல்ஏ மது ஸ்ரீவஸ்தவ்வும் அடங்குவர். கட்சியால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட 12 பேரில் பத்ராவின் முன்னாள் எம்.எல்.ஏ., டினு படேல் மற்றும் பயாட்டின் முன்னாள் எம்.எல்.ஏ., தவல்சிங் ஜாலா ஆகியோர் அடங்குவர்.

குல்திப்சிங் ரவுல் (சாவ்லி), கதுபாய் பாகி (ஷெஹ்ரா), எஸ்.எம். காந்த் (லுனாவாடா), ஜே.பி. படேல் (லுனாவாடா), ரமேஷ் ஸலா (உம்ரேத்), அமர்ஷி ஸலா (கம்பட்), ராம்சிங் தாகூர் (கெரலு), மாவ்ஜி தேசாய் (தனேரா), லெப்ஜி தாக்கூர் (தீசா தொகுதி) மற்றும் பலர் இதில் இடம்பெற்றுள்ளனர்.

குஜராத் தேர்தல்:

மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. 89 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக  டிசம்பர் 1-ஆம் தேதியும், 93 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக  டிசம்பர் 5- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள்  டிசம்பர் 8- ஆம் தேதி எண்ணப்படுகிறது. 

மாநிலத்தில் 51,700 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் 4.90 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 33 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாக இளைஞர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். 

சவால்:

மாநிலத்தில் 1,274 வாக்குச்சாவடி மையங்கள் பெண் அலுவலர்களால் நிர்வகிக்கப்பட உள்ளது. குஜராத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத் மாநிலத்தில் 1998-ஆம் ஆண்டு முதல் பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 24 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் தொடரும் பா.ஜ.க. கட்சிக்கு இம்முறை சவால் மிகுந்த தேர்தலாக இருக்கும். 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *