பூந்தமல்லி அருகே நடிகர் விஜய்யின் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் உரிய அனுமதியின்றி விலங்குகளை வைத்து படப்பிடிப்பு நடத்தியதாக புகார் எழுந்த நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு படத்திற்காக பிரம்மாண்டமாக அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு ஆயிரம் மாடுகள் மற்றும் யானைகளை வைத்து உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்துவதாக தகவல்கள் வெளியாகின. அதையடுத்து சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளரொருவர், அங்கு செய்தி சேகரிக்க சென்றதாகவும், அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தை அவர் ட்ரோன் கேமரா மூலம் படம்பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

image

இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த ஊழியர்கள், செய்தியாளர்கள் மற்றும் கேமராமேன் வைத்திருந்த கேமராவை பறித்து அவர்களை மிரட்டி காரில் கடத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் அந்த தொலைக்காட்சியில் வெளியானதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நசரத்பேட்டை போலீசார், இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

image

இதைத் தொடர்ந்து தங்களை தாக்கியதாக செய்தியாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அனுமதியின்றி படப்பிடிப்பு தளத்திற்குள் ட்ரோன் கேமராவை பறக்க விட்டு படம் பிடித்ததாக படப்பிடிப்பு குழுவினரும் புகார் அளித்தனர். இரண்டு தரப்பினரும் அளித்த புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *