(கவனத்திற்கு: இக்கட்டுரை, மிகவும் சென்சிடிவான செய்தியை நடந்தவற்றின் அடிப்படையில் சொல்லும். கவனத்துடன், உள்நுழையவும்)

குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு கொண்ட குற்றவாளி பெண்மை குணம் கொண்டவராக மாறியதால் அவரை நீதிமன்றம் விடுவித்தது.  

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 56 வயதான ஆண் ஒருவர், குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்புக் கொண்ட மிகக்கொடூரமான குற்றச்செயல் புரியும் ஒரு நபராக இருந்துள்ளார். தனது பணிகளுக்கிடையே அந்நபர் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து குற்றச்செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

ராயல் ஆஸ்திரேலிய விமானப் படையில் பணியாற்றி வந்த இவர், கடந்த 2005ஆம் ஆண்டில் அந்த வேலையை உதறிவிட்டு, தாய்லாந்தில் பீங்கான் பொம்மைகள் தொடர்பான வணிகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக இவரை போல குழந்தைகள் மீது தவறான எண்ணம் கொள்ளும் மற்றொரு நபரான மார்க் பெண்டில்டன் என்பவருடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து தாய்லாந்தில் உள்ள பெண்களை தங்களது வணிக வேலைவாய்ப்புக்காக ஆஸ்திரேலியாவுக்கு வரவழைத்து உள்ளனர். இதற்காக தாய்லாந்தில் இருந்து நிறைய ஏழை பெண்கள் தங்களது பிள்ளைகளுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். இதன்பின் இவர்கள் இருவரும் சேர்ந்து வேலைக்காக வந்த தாய்லாந்து பெண்களின் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

image

இதுகுறித்த தகவல் தாய்லாந்து பெண்களுக்கு தெரிய வரவே அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த இருவரில் ஒருவன் தனது வாழ்நாளில் 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

குற்றம் நிரூபனமானதைத் தொடர்ந்து அந்த நபர் கடந்த 2005இல் பெர்த்தில் உள்ள கசுவரினா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். 2008இல் பரோலில் விடுவிக்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் தாய்லாந்தில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் விடுதியை வாங்கி அங்கிருக்கும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்ய கொடூரமாக திட்டமிட்டிருக்கிறார்.

image

இந்த விபரம் வழக்கறிஞர்களுக்கு தெரிய வரவே அவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளனர். `குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு என்பது ஒரு மனநோய்’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்த நீதிமன்றம், அந்த நபருக்கு, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது. இதற்காக ஆன்டி-லிபிடினல் என்ற மருந்து அவருக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்டு வந்தது. இதனால் அவரது உடலில் ஏற்பட்ட ஹார்மோன் மாற்றங்களால் குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்பு குறைந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2019இல் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் ‘ஜென்டர் டிஸ்ஃபோரியா’ (Gender Dysphoria) எனப்படும் பாலின மன உளைச்சல் நோய்க்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த மனநோயினால் பாதிக்கப்பட்டவர்  உடலியலில் ஆணின் தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அவர் தன்னுடைய உண்மையான அடையாளமாக பெண்மையை கருதுவார்.

இதையடுத்து மேற்கு ஆஸ்திரேலியா உயர் நீதிமன்றம் புதிதாக பிறப்பித்துள்ள உத்தரவில் அந்த நபருக்கு குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்பு மனநிலை இப்போது இல்லை என்பதால் அவரை விடுவிக்க ஆணையிட்டனர். மேலும் அவருக்கு நிகழ்ந்துள்ள ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்ய முடியுமா என்பது குறித்த சாத்தியக்கூறுகளை ஆராயும்படி மருத்துவத் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล