நடிகை காயத்ரி ரெட்டி திருமணம்

9/30/2022 12:18:13 AM

சென்னை: பிகில் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயத்ரி ரெட்டி, அந்த படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் மாரியம்மாள் என்ற வீராங்கனையாக நடித்திருந்தார். அழகி போட்டியில் டைட்டில் வென்று அதன் மூலம் மாடலிங் துறையிலும், விளம்பரத்துறையிலும் பணியாற்றியவர். பின்னர் சினிமாவுக்கு வந்தார். லிப்ட் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. பெற்றோர் பார்த்து முடிவு செய்த மாப்பிள்ளையை திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திருமணம் நடந்துள்ளது. தனது திருமண படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அவர் மணமகன் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இதுகுறித்து நிச்சயதார்த்தத்தின் போது மீடியாக்களிடம் பேசிய காயத்ரி, ‘‘இது பெற்றோர் முடிவு செய்த திருமணம். நிச்சயதார்த்தத்திற்கு பிறகு இருவரும் காதலித்து வருகிறோம், மணமகன் வெளிநாட்டில் கட்டுமானத் தொழில் செய்கிறார். திருமணத்திற்கு பிறகு வெளிநாட்டில் கணவருடன் செட்டிலாகிறேன்’’என்று தெரிவித்திருந்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *