கர்நாடகாவில் நாகப் பாம்பு ஒன்றை பிடித்த பாம்பு மீட்பர் அதனை முத்தமிட முயற்சித்தபோது, அது அந்த நபரின் வாயில் தீண்டியது. பாதிக்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் கர்நாடகா மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் பொம்மக்கட்டேவில் நடந்துள்ளது. இவர் வழக்கமாக பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துவிட்டால் அதை பிடித்து வனப்பகுதியில் விடுவார். அதனால், அப்பகுதியில் சற்றே பிரபலமானவர். இந்நிலையில்தான் பாம்பைப் பிடித்ததோடு இல்லாமல், அதை வைத்து சாகசம் செய்ய நினைத்தபோது அவர் தீண்டப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ‘பாம்பு மீட்பர்’ வாவா சுரேஷ் செங்கனாச்சேரி அருகே குறிச்சி எனும் பகுதியில் ஒரு வீட்டில் நாகப் பாம்பு பிடிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக அது கடித்தது. அதில் அவர் அங்கேயே மயக்கமான நிலைக்குச் சென்றார். பின்னர் கோட்டயம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் பல நாட்கள் கோமா நிலையில் இருந்துவிட்டு மீண்டார்.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே பல்வேறு தரப்பிலிருந்து முறையாக பயிற்சி பெறாத பாம்பு மீட்பர்களை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில்தான் மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *