சசிகலா இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருப்பார்கள். தேர்தல் என்பது வேறு; அரசாங்கம் என்பது வேறு. நாம் அனைவரும் வரி செலுத்துகிறோம். அதனால் நாம் அனைத்தையும் கேட்டுப் பெறுவதற்கு 100 சதவிகித உரிமை இருக்கிறது. இதுதான் நம்முடைய தலைவர்கள் பின்பற்றிய வழியும்கூட.

நாம் தற்போது அரசாங்கம் நடத்துகிறோம் என்றால் நமக்கு வேண்டியதை நாம் கேட்டுதான் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மத்திய அரசிடமிருந்து எதையும் கேட்டுப் பெற மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மத்திய அரசை விமர்சிப்பது வேறு. தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

அதிமுக-விலிருந்து பிரிந்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே என் எண்ணம். கட்சி ஒன்றிணைய வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி அமோக வெற்றி பெற வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். நான் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை. தமிழ்நாடு காவல்துறையைப் பொறுத்தவரை நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்களைச் சரியாக கவனித்து நடத்த வேண்டும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล