புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜூன கார்கே, கட்சி கொள்கைப்படி ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, சோனியாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் சசி தரூரை எதிர்த்து, சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசியான மல்லிகார்ஜூன கார்கே களமிறக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

latest tamil news

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை அடிப்படையில், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, அதற்கான கடிதத்தை சோனியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து புதிய ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล