ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்திருக்கும் பெரியகுக்குண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சரவணன், வயது 50. இவர் மனைவி சாந்தி. இவரின் வயது 45. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்கள். இந்த நிலையில், இன்று காலை வீட்டின் அருகேயுள்ள தன் நிலத்துக்குச் சென்றார் சரவணன். அப்போது, நிலத்துக்குள் இருந்த மின்கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து கீழே வரப்புமீது கிடந்ததை அவர் கவனிக்கவில்லை. அதன்மீது கால் வைத்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரின் பின்னால் வந்துகொண்டிருந்த அவர் மனைவி சாந்தி, அலறியடித்தபடி ஓடிச்சென்று கணவனைக் காப்பாற்ற முயன்றார்.

உயிரிழந்த தம்பதி

உயிரிழந்த தம்பதி

இதில், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. நிகழ்விடத்திலேயே தம்பதி இருவரும் துடிதுடித்து பரிதாபமாக மரணித்தனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் ஆற்காடு தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், மின் இணைப்பைத் துண்டிக்கச் செய்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தம்பதி இருவரும் ஒரே நேரத்தில் மரணித்திருப்பது, அப்பகுதி மக்களை துயரில் ஆழ்த்திருக்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล