Loading

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்சாகிர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வகுப்பறையில் பூட்டப்பட்டிருக்கிறார். வியாழக்குழமை மாலை வேளையில் சிறுமி வீடு திரும்பாத காரணத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது வகுப்பறையில் இருந்து அந்த குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுது கொண்டிருந்தாள்.

பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வியாழக்கிழமை அப்பகுதியில் தொகுதி அளவிலான யூனியன் தேர்தல் இருந்தது, அதற்காக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியரும் சீக்கிரமாக பள்ளியை விட்டு வெளியேறிவிட்டனர் என கூறப்படுகிறது.

அந்த விசாரணையில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், குழந்தைகளை ஊழியர்களின் பொறுப்பில் விட்டுவிட்டு சிறிது நேரத்துக்கு முன்பாகவே வீடு திரும்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அலட்சியமாக இருந்த தலைமை ஆசிரியர், 4 ஆசிரியர்கள் மற்றும் 3 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *