சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

சென்னை தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை, திருநீர்மலை அருகே சாலையில் வந்து கொண்டிருந்த சொகுசு காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வர துவங்கியுள்ளது. இதையடுத்து உடனடியாக சுதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநர் சதீஷ் காரை சாலையின் ஓரம் நிறுத்திவிட்டு அவரும் காரில் பயணித்த பிரதீப் என்பவரும் காரில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.

image2

இந்நிலையில், சிறிது நேரத்தில் புகை தீயாக மாறி எரியத் துவங்கியது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனால் மதுரவாயல் புறவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விசாரணையில் காரைக்குடியில் இருந்து நொளம்பூரில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்ததாகவும், இன்று வண்டலூர் செல்ல காரில் வந்த போது தீ விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. சாலையில் செல்லும் கார்கள் மற்றும் டூவீலர்கள் திடீரென தீப்பிடித்து எரிவது சமீப காலமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล