கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள விழிஞ்சம் நகரைச் சேர்ந்தவர் அபர்னா(31). இவரை எதிர்பாராத விதமாக பூனை கடித்ததால் மூன்றாவது டோஸ் ஆண்டி ரேபிஸ் தடுப்பூசி செலுத்த அப்பகுதியிலுள்ள சுகாதார நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். அபர்னாவுடன் இவரது தந்தையும் சென்றதாக தெரிகிறது. அந்த பெண் காலை எட்டு மணியளவில் சென்ற நிலையில், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக நாற்காலியின்கீழ் படுத்திருந்த தெருநாய் அவரை கடித்துவிட்டது.

இதைக்கண்டு அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை பொதுநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சையும் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக அபர்னாவின் தந்தை கூறும் போது, “ என் மகளை நாய் கடித்துவிட்டது. நாய் கடித்த காயத்துக்கு முதலுதவி கூட யாரும் செய்யவில்லை. ஆனால் அங்கிருந்த மற்றொரு நோயாளியின் காயத்தை சோப்பு கொண்டு கழுவி சுத்தம் செய்ய உதவி செய்தனர்” என்றார்.

கேரளாவில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்துவருகின்றன. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். கேரள மாநிலத்தில் இதுவரை, 2022 ஆம் ஆண்டில் ரேபிஸ் காரணமாக 21 பேர் இறந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *