வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திற்கு எதிராக பொது நல வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தது.

மத்திய பிரதேச ஜான் விகாஷ் என்ற கட்சியின் தலைவர் கடந்த ஆண்டு போபால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு தள்ளுபடியானதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

latest tamil news

இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதிகள் எஸ்.கே. கவுல், ஓ.எஸ். யுஹா கூறியது, மின்ணனு ஓட்டுப்பதிவு இயந்திரம் தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது .வெறும் விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கை மனுதாரர் தொடர்ந்து உள்ளார். தகுந்த முகாந்திரம் இல்லை. எனவே இம்மனு தள்ளுபடி செய்யப்படுவதுடன், மனுதாரருக்கு ரூ. 50 ஆயிம் அபாரதம் விதிக்கிறது. அபராத தொகையை நீதிமன்ற கடைநிலை ஊழியர்கள் நலச்சங்கத்திற்கு நன்கொடையாக வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *