சிவன் கோயிலிலுள்ள அம்பாள் புரட்டாசி மாத சனிக்கிழமையில் பெருமாளாக உருமாறி, பக்தர்களுக்கு திருப்பதி சென்று தரிசித்த நிறைவைத் தருவதற்கு ஒரு விசேஷ காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள்.

“பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் திருப்பதியில் அருளும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளைத் தரிசிக்கச் சென்ற ஆழ்வாராதிகள் அங்கே பெருமாள் தரிசனம் கிடைக்கப் பெறாத நிலையில் மனவருத்தமுடன் திரும்பினர்.

அம்பாள் பெருமாளாக காட்சி தந்து அருள்பாலிக்கிறார்

அம்பாள் பெருமாளாக காட்சி தந்து அருள்பாலிக்கிறார்

அப்போது, ‘நீங்கள் விரும்பிய எனது தரிசனம் காவிரிக்கரை க்ஷேத்திரத்தில் கிடைத்திடும்’ என அசரீரீ வாயிலாக இறையால் உணர்த்தப் பெற்ற ஆழ்வாராதிகள், தங்களின் பயணத்தைத் தொடர்ந்தனர். காவிரிக்கரைத் தலங்களை வரிசையாகத் தரிசித்தபடி வந்து கொண்டிருந்த நிலையில், உத்திரவாஹினி க்ஷேத்திரமான திருகோடிக்காவல் ஆலயத்து கோபுரத்தினை தூரத்திலிருந்து கண்டவுடன் பெருமாள் ஆலயம் என்றெண்ணி ஆவலுடன் நெருங்கினர். அருகில் வந்தபின்னர்  ‘அது சிவாலயம்’ என அறிந்தவுடன் வந்தவழியே திரும்பிச் செல்ல எத்தனிக்கையில், 

‘இச்சிவாலயத்திலேயே பெருமாள் தரிசனம் கிடைக்கும்’ என்று  மீண்டும் அசரீரீ ஒலித்தது. அதன்படி, இத்தலத்து அம்பாளான  திரிபுரசுந்தரியே தனது சகோதரனாகிய வேங்கடவனின் வடிவந்தாங்கியவளாய், சங்குசக்கரதாரியாகக் காட்சி அளித்து ஆழ்வார்களை மகிழ்வித்தாள்” என்கிறது புராணவரலாறு.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *