Loading

சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டு இருப்பதால், நாட்டின் முழுக்கட்டுப்பாடும் அந்நாட்டு ராணுவத்திடம் சென்றுவிட்டதாகவும், சீனா அதிபர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பல செய்திகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தன. மேலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் , ராணுவ வானங்களின் அணிவகுப்பு போன்ற பல வீடியோக்களும் பரவின.

இந்த செய்திகளை மேலும் வலுவாக்கும் விதமாக, கார்டன் ஜி சாங் என்ற எழுத்தாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில், ‘சீனாவின் மூத்த அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 59% விமானங்கள் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன’ என்று பதிவிட்டிருந்தார்.  இவ்வாறான செய்திகள் குறித்து சீன அரசு தரப்பிலிருந்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதால் வதந்திகள் மேலும் வலுவடைந்தது. 

image

ஆனால் ராணுவ வாகனங்களின் அணிவகுப்பு போன்ற வீடியோகள் பழைய வீடியோகள் என்றும், கார்ட்ன் ஜி சாங்கின் ட்விட்டர் பதிவு, போலியாக உருவாகப்பட்டவை என அடுத்த சில தினங்களில் உறுதியானது. அப்படி என்றால் சீனாவில் என்ன நடக்கிறது? சீன அதிபரை ஏன் பொதுநிகழ்ச்சிகளுக்கு வரவில்லை போன்ற பல கேள்விகளும் சந்தேகங்களும் தொடர்ந்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில், அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதுள்ளார் அதிபர் ஜி ஜின்பிங். 10 நாட்களுக்கு முன்பு உஸ்பெகிஸ்தான் வரை சென்று திரும்பியிருப்பதால்  கொரோனா முன்னெச்சரிக்கையாகத் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார் ஜின்பிங்.

சீனா முழுவதும் அதிபரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஆட்சியைக் கலைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதி தான் வதந்திகள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அக்டோபர் 9-ம் தேதி பீஜிங்கில் நடைபெறவிருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19-வது மாநாட்டுக்கான புதிய உறுப்பினர்களை அறிவித்திருக்கிறார் ஜின்பிங். பத்து நாட்களுக்கு மேலாக வெளியில் வராமல் இருந்த ஜி ஜின்பிங் இன்று பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *