Loading

நவராத்திரி விழா மற்றும் துர்கா பூஜை உள்ளிட்டவைகளை முன்னிட்டு இந்திய ரயில்வே இரயில் பயணிகளுக்கு விழாகால சிறப்பு உணவுகளை அறிமுகம் செய்துள்ளது. 

நவராத்தி விழாவின் ஒன்பது நாள் கொண்டாட்டத்தின்போதும் இரயிலில் பயணிப்பவர்களுக்கு சிறப்பு உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்திருந்தது. அதாவது நவராத்தி விழாவின்போது வீடுகளில் தயாரிக்கும் பாரம்பரியமான சுவைமிக்க உணவுகளை பயணிகளுக்கு இரயில் கிடைக்கும் சேவை அறிமுகமாகியுள்ளது. இந்த உணவுகள் வெங்காயம், பூண்டு பயன்படுத்தாமல் தயாரிக்கப்பட்டுள்ளதாக இரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்த சேவை நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை சிறப்பு உணவுகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி உணவு ஆர்டர் செய்வது:

விழாக்காலம் என்றாலே சுவைமிக்க உணவுதானே நினைவுக்கு வரும். ஆனால், பயணத்தில் உள்ளவர்களும் 9 நாட்களும் விதவிதமாக சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது. ‘Food on Track’ என்ற ஆப் மூலமாகவும்  https://ecatering.irctc.co.in/ என்ற இணையதளத்தில் மூலமாகவுகம் ஆர்டர் செய்யலாம். உணவு ஆர்டர் செய்ய ‘1323’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய ரயில்வே அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

எந்த உணவுகளை ஆர்டர் செய்கிறோமோ அதற்கு ஏற்ப விலை மாறுபடுகிறது. IRCTC நிறுவனத்தின் இ-கேட்டரிங் வசதி உள்ள ரயில்களில் மட்டுமே இந்த நவராத்திரி சிறப்பு உணவுகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி. இன் உணவு ஆர்டர் செய்யும் ஆப் – https://play.google.com/store/apps/details?id=cris.org.in.prs.ima&hl=en_US&gl=US என்ற லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எப்படி ஆர்டர் செய்வது?

ஐ.ஆர்.சி.டி.சி.-இன் வலைதள பக்கத்தில் உணவுகளை எப்படி ஆர்டர் செய்வது என்பது பற்றி காணலாம்.

https://www.ecatering.irctc.co.in/ இணையதளத்துக்கு செல்லவும்.

அதில் நீங்கள் பயணிக்கும் இரயிலின் PNR எண்ணை பதிவிட வேண்டும்.

சிறப்பு உணவுகளின் பட்டியலில் இருந்து, நீங்கள் விரும்பும் உணவை தேர்வு செய்யவும்.

உணவுகளை தேர்வு செய்தவுடன் அதற்கான கட்டணத்தை ஆன்லைன் செலுத்த வேண்டும். 

அவ்வளவுதான் ஆர்டர் முடிந்தது.

சில நிமிடங்களில், இரயிலில் உங்கள் இருக்கைக்கே சுவையான உணவு டெலிவரி செய்யப்படும்.

நவராத்திரி- ‘Vrat thalis- சிறப்பு மெனு:

நவராத்திரி விழாக்களில் தயாரிக்கப்படும் சாபுதானா கிச்சடி (ஜவ்வரிசி கிச்சடி), இனிப்பு வகைகள் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் கிடைக்கும். மேலும், இதன் சிறப்பு என்னெவென்றால், நவராத்தி விழா சிறப்பு உணவுகளில் வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தாத உணவுகள் மெனுவில் இடம்பெற்றுள்ளது என்று இரயில் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயணிகல் விரத கால உணவு கிடைக்கவில்லையே என்று வருந்த வேண்டும்.  பராத்தா, ஆலூ சாப் (உருளை பொரியல்), ஜவ்வரிசி டிக்கி, ஜவ்வரிசி கிச்சடி, பனீர் மக்மாலி ஆகியவை நவராத்திரி மெனுவில் உள்ளன. இதுபோக நவராத்தி விழா அன்று மாலை செய்யப்படும் பாரம்பரியமான உணவுகள் கிடைக்கும். ரூ.99-இல் இருந்து சிறப்பு உணவுகளின் மெனு தொடங்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *