மும்பை அருகிலுள்ள நாலாசோபாரா மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் பிரிஜேஷ். பிரிஜேஷும் அவர் மனைவியும் தங்களுக்கு சமையல் செய்துபோட வேலைக்கு ஆள் வைத்திருந்தனர். அந்த நபர் திடீரென தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து வேலைக்கு வேறு ஓர் ஆளைத் தேடினார் பிரிஜேஷ். ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவரின் துணையோடு லட்சுமி என்பவரை சமையல் வேலைக்குச் சேர்த்தனர். லட்சுமியின் கணவர் மன்பகதூர் என்பவரைப் பாதுகாவலர் வேலைக்கு சேர்த்துக்கொண்டனர். கடந்த மாதம்தான் இருவரும் வேலைக்குச் சேர்ந்தனர். அவர்களிடம் பிரிஜேஷ் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை வாங்கிவைத்திருந்தார். சம்பவத்தன்று வீட்டில் இரவு நேரத்தில் லட்சுமி இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்துக்கொடுத்தார். இருவரும் சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டனர். உடனே வீட்டிலிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு லட்சுமியும் அவர் கணவரும் தப்பிச்சென்றுவிட்டனர்.

மறுநாள் காலையில் இருவரும் மயங்கிக்கிடந்தனர். பிரிஜேஷின் தந்தை அவர்களை தொடர்புகொள்ள முயன்று முடியாததால் நேரில் வந்து பார்த்தபோது அவர்கள் மயங்கிக்கிடந்தனர். உடனே அவர்களை மருத்துவமனையில் சேர்த்தார். இரண்டு நாள்கள் அவசர சிகிச்சைக்குப் பிறகுதான் இருவரும் மயக்கம் தெளிந்தனர். இது குறித்து பிரிஜேஷ், “ஆகஸ்ட் 5-ம் தேதிதான் இருவரையும் வேலைக்குச் சேர்த்தோம். வேலைக்குச் சேர்ந்த ஒரு மாதத்தில் எங்கள் நம்பிக்கையைப் பெற்றனர். சம்பவத்தன்று இரவு சாப்பிட்டவுடன் கடுமையான தலைவலி ஏற்பட்டது. உடனே மயக்கமடைந்துவிட்டோம். வீட்டில் பீரோவிலிருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை இருவரும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்” என்று தெரிவித்தார்.

நேபாளத் தம்பதி

நேபாளத் தம்பதி

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். ஆரம்பகட்ட விசாரணையில் தப்பிச் சென்ற இருவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் கொடுத்திருக்கும் அடையாள ஆவணங்கள் உண்மையானவைதானா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டுவருகிறது. சாப்பாட்டில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு, இருவரும் நகைப் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *