Loading

மதுரை சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “திண்டுக்கல் மாவட்டம் குடைப் பாறைபட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு மர்ம கும்மல் பெட்ரோல் குண்டு வீசியதில் ஒரு கார், 5 டூவீலர் எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பேகம்பூரை சேர்ந்த சிக்கந்தர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுகிறது. மேலும் தென் மாவட்டத்தில்  20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறோம்.

பெட்ரோல் குண்டு வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேவைப்பட்டால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்கள். தென் மாவட்டத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம் இரண்டு இடங்களில்  பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் வீடுகள், கடைகள், அலுவலகங்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் பங்குகளில்  பாட்டில்களில் பெட்ரோல் விநியோகம் செய்ய வேண்டாம் என அறிவுத்தப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள முக்கியமான நபர்களின் வீடுகள் அலுவலகங்கள் தொழில் செய்யும் இடங்களில் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் டிஐஜி தலைமையில் இரவு ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சந்தேகக் கூடிய நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்.

 

தென் மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு வழக்குகள் தற்போது வரை பதிவாகியுள்ளது. வீடுகள் மற்றும் முக்கிய பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவத்தில் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என ஐ.ஜி.அஸ்ரா கர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *