டாப் செல்லர் (அ) சூப்பர் செல்லர் குற்றவாளியான பீகார் மாநிலம் தனபூர் பகுதியைச் சேர்ந்த சைலேஷ் யாதவ் (27) என்ற பட்டதாரி இளைஞரை திருச்சி டிவிசன் ஆர்.பி.எஃப் சைபர் கிரைம் போலீசார் ரயில்வே போலீசார் உதவியுடன் கைது செய்தனர்.
பைபாஸ் சாப்ட்வேர் என்பது வெளிநாடுகளிலிருந்து விர்ச்சுவல் ஐடி மூலம் சாப்ட்வேர் வாங்கி, அரசு இணையதளத்திற்குள் சென்று அதன் செயல்பாடுகளை குலைக்க பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர் ஆகும். போலீசார் விசாரணையில் Tatkalsoftwareall.in என்ற இணையதளம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட் புக்கிங் ஏஜெண்டுகளுக்கு பைபாஸ் சாப்ட்வேர்களான SHARP, NEXUS, BMX PLUS, ELITE, BLACK TIGER, TESLA, COVID V2, CORONA, ALL INTERFACE, RED TURBO உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை சர்வதேச எண்கள் மூலம் வாங்கி அதனை சட்டத்திற்கு புறம்பாக தக்கல் டிக்கெட்களை பதிவு செய்யும் ஏஜெண்டுகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
52 நொடிகளில் 100 கி.மீ. வேகம் – ஜப்பானின் புல்லட் ரயில் வேகத்தை முறியடித்த வந்தே பாரத் ரயில்.!
கைது செய்யப்பட்டுள்ள சைலேஷ் யாதவ் மூலம் கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும் சுமாராக ஒன்றரை லட்சம் தக்கல் டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு அதன் மூலம் ரூபாய் 56 கோடி இந்தியன் ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில் தக்கல் டிக்கெட் மோசடி என்பது வெளிவராமல் நடந்து கொண்டிருக்கும் மிகப்பெரிய மோசடி ஆகும். இந்த டாப் செல்லர் கும்பல்கள் எப்படி இயங்குகின்றன? அவர்களை பிடிப்பதற்கான என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்து RPF கமிஷனர் செந்தில் குமரேசன், நியூஸ் 18 தமிழ்நாடு சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், ரயில்வே தக்கல் டிக்கெட் மோசடி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சூப்பர் செல்லர்கள் (அ) டாப் செல்லர்கள் தங்களுக்கு தேவையான சாஃப்ட்வேர்களை வெளிநாடுகளில் இருந்து வாங்குவதைவிட தாங்களே சொந்தமாக தயாரித்து அதனை சட்டவிரோத ஏஜெண்டுகளிடம் விற்பனை செய்து வருவதாகவும், இந்தியா முழுவதுமே சூப்பர் செல்லர்கள் (அ) டாப் செல்லர்கள் இதுபோன்ற சாப்ட்வேர்களை உருவாக்கி இந்தியன் ரயில்வே துறைக்கு மாபெரும் இழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
லாட்டரியில் கோடிகளை வென்றவர்களுக்கு பணத்தை கையாள பயிற்சி.. கேரளா அரசு திட்டம்
மேலும், சூப்பர் செல்லர்களை சைபர் கிரைம் உதவியிடன் கண்டறிந்து கைது செய்வதற்காக ஆர்.பி.எஃப் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மோசடி கும்பல் பைபாஸ் சாப்ட்வேர்களை பயன்படுத்தி IRCTC இணையதளத்தில் புகுந்து, தக்கல் டிக்கெட்டுகளை நொடிப் பொழுதில் தங்களுக்கானதாக மாற்றிக் கொள்கின்றன.
குறிப்பாக, சூப்பர் செல்லர்களுக்கு சமூக விரோத இயக்கங்களோடு தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், சூப்பர் செல்லர்கள் சமூக விரோத அமைப்புகளுக்கு பணம் அனுப்பி உள்ளதும் சைபர் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல சூப்பர் செல்லர்களிடமிருந்து சாப்ட்வேர் வாங்கும் அரசு உரிமம் இல்லாத ஏஜெண்டுகள் குறித்த சோதனைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்த அவர், பொதுமக்கள் டிக்கெட் பதிவு செய்ய ஏஜெண்டுகளை நாடக்கூடாது எனவும் எச்சரித்தார்.
கடந்த ஆண்டு King, King PRO சாஃப்ட்வேர் பயன்படுத்தி தட்கல் மோசடி செய்தது தொடர்பாக சென்னையில் நூறு வழக்குகள் பதியப்பட்டு ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் நடப்பு ஆண்டில் தற்போது வரை 67 வழக்குகள் பதியப்பட்டு, ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டு ரூபாய் 19 லட்சம் மதிப்பிலான தட்கல் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் RPF கமிஷனர் செந்தில் குமரேசன் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.