பூமியின் பூர்வீக பிள்ளைகள் இல்லையா நாம்? என்ற கேள்விகளை ஒரு அறிவியல் ஆராய்ச்சியின் முடிவுகள் எழுப்புகின்றன. பூமியில் உயிர்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் என்பதைக் குறிக்கும் சமிக்ஞைகளை ஒரு ஆராய்ச்சிக் கொடுக்கிறது. சிறுகோள் தூசியில் காணப்படும் நீர் ஏற்படுத்தும் சந்தேகங்கள், விஞ்ஞானிகளின் முந்தைய அனுமானங்களை உறுதி செய்வதாக இருக்கிறது. ரியுகு என்ற சிறுகோளில் இருந்து ஹயபுசா-2 ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட 5.4 கிராம் பாறைகள் மற்றும் தூசிகளின் பகுப்பாய்விலிருந்து வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்புகள் உள்ளன.

ஜப்பானிய விண்வெளி ஆய்வு, பூமியில் இருந்து சுமார் 300 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறுகோளில் இருந்து தூசிப் புள்ளிகளை மீட்டுள்ளது. இது மிகவும் ஆச்சரியமான உள்ளடக்கம் என்றும், ஒரு துளி நீர் என்பது பல விஞ்ஞான அனுமானங்களை உறுதி செய்வதாக இருக்கிறது என்று விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23, 2022) தெரிவித்தனர்.

மேலும் படிக்க | இதுவரை யாரும் பார்க்காத பிரபஞ்சத்தின் பிரமாண்டமான காட்சி!

பூமியில் உள்ள உயிர்கள் விண்வெளியில் இருந்து வந்திருக்கலாம் என்று சொல்லும் முந்தைய பகுப்பாய்வுகளை, இந்த புதிய கண்டுபிடிப்பு ஆதரிப்பதாக உள்ளது.

“இந்த ஒரு துளி தண்ணீருக்கு பெரிய அர்த்தம் உள்ளது” என்று தோஹோகு பல்கலைக்கழகத்தின் முன்னணி விஞ்ஞானி டோமோகி நகமுரா வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட ஜெர்னல் சயின்ஸ் (journal Science) என்ற அறிவியல் சஞ்சிகையில் ஆராய்ச்சியை வெளியிடுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் கூறினார்.

“பல ஆராய்ச்சியாளர்கள் தண்ணீர் விண்வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக நம்புகிறார்கள், ஆனால் நாங்கள் உண்மையில் முதல் முறையாக பூமிக்கு அருகில் உள்ள ஒரு சிறுகோள் Ryugu இல் தண்ணீரைக் கண்டுபிடித்தோம்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | சனி கிரகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சனியின் வளையங்கள்

ரியுகு என்ற சிறுகோளில் இருந்து ஹயபுசா-2 ஆய்வு மூலம் சேகரிக்கப்பட்ட 5.4 கிராம் பாறைகள் மற்றும் தூசிகளின் பகுப்பாய்விலிருந்து வெளியிடப்பட்ட சமீபத்திய ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த கண்டுபிடிப்புகள் உள்ளன.

ரியுகு மாதிரியில் “உப்பு மற்றும் கரிமப் பொருட்களைக் கொண்ட கார்பனேற்றப்பட்ட நீர்” கொண்ட ஒரு துளி திரவத்தை குழு கண்டறிந்ததாக ஆராய்ச்சி கூறுகிறது.

ஹயபுசா-2, 2014 ஆம் ஆண்டு ரியுகு என்ற சிறுகோளை ஆராயும் பணிக்காக ஏவப்பட்டது. இந்த ஆராய்ச்சியில், ஹயபுசா-2, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் சுற்றுப்பாதையில் மாதிரியைக் கொண்ட ஒரு காப்ஸ்யூலுடன் திரும்பியது.

மேலும் படிக்க | செயற்கை கட்டிடத்தில் இயற்கையாக எதிரொலிக்கும் பிரபஞ்ச ரகசிய வீடியோ வைரல்

இது. ஏற்கனவே பல நுண்ணறிவுகளை அளித்துள்ளது, அதில் கரிமப் பொருட்கள் உட்பட, பூமியில் உள்ள சில கட்டுமானத் தொகுதிகளான அமினோ அமிலங்கள் விண்வெளியில் உருவாகியிருக்கலாம் என்பது உட்பட பல முக்கியமான அறிவியல் தரவுகள் அடங்கும்.

ரியுகு போன்ற சிறுகோள்கள் அல்லது அதன் பெரிய சிறுகோள்கள் பூமியுடன் மோதும்போது “உப்பு மற்றும் கரிமப் பொருட்களைக் கொண்ட தண்ணீரை வழங்கியிருக்கலாம்” என்ற கோட்பாட்டை சமீபத்திய வெளிப்பாடு வலுப்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

“இந்த (செயல்முறை) எடுத்துக்காட்டாக, கடல்களின் தோற்றம் அல்லது பூமியில் உள்ள கரிமப் பொருட்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்” என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ 

மேலும் படிக்க | நெப்டியூனின் அழகை மட்டுமல்ல ரகசியங்களையும் அவிழ்க்கும் ஜேம்ஸ் வெப்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล