சாலையை சீரமைக்க வேண்டும்

பாகூர், சோரியாங்குப்பம் சுடுகாட்டு பாதை குண்டும் குழியுமாக உள்ளதை சீரமைக்க வேண்டும்.கோவிந்தராஜ், முதலியார்பேட்டை.நாய் தொல்லையால் அவதி கதிர்காமம், ஆனந்தா நகர் பாரதி வீதியில் நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளது.தேவகிருபை, கதிர்காமம்.குப்பையால் துர்நாற்றம் அரியாங்குப்பம் ஆனந்தம் நகர் 3-வது குறுக்கு தெருவில் கொட்டப்பட்டுள்ள மாட்டு சாணத்தால் துர்நாற்றம் வீசுகிறது. செந்தில், அரியாங்குப்பம்.இருண்டு கிடக்கும் சுனாமி குடியிருப்புபெரியக்காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு உட்புற சாலைகளில் தெரு விளக்கு எரியவில்லை.குமார், பெரியக்காலாப்பட்டு.விபத்து அபாயம்பெரியக்காலாப்பட்டு இ.சி.ஆர் – மாத்துார் சாலை சந்திப்பில் விபத்து அபாயம் உள்ளதால் எச்சரிக்கை சிக்னல் சமிக்கை விளக்கு அமைக்க வேண்டும்.புவனேஸ்வரி, பெரியக்காலாப்பட்டு.பூங்கா சீரமைக்கப்படுமா?கருவடிக்குப்பம் சிங்கம் பூங்காவில் நீரூற்று உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சேதமடைந்துள்ளது.கந்தன், கருவடிக்குப்பம்.புதுச்சேரி, செப். 26-

புதுச்சேரியில் அரசியல் கோட்பாட்டிற்கு எதிராக கடையடைப்பு போராட்டம் அமைந்துள்ளதாக, திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் இசைகலைவன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி திருமண மண்டப உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் இசைக்கலைவன் விடுத்துள்ள அறிக்கை:மக்கள் சேவையே அரசியலின் பிரதான நோக்கமாகும். இந்த கோட்பாட்டிற்கு எதிராக தொடர் போராட்டம் அமைந்துள்ளது. ஒரு மாநில வளர்ச்சி என்பது அம்மாநிலத்தில் நடக்கும் வணிக வளர்ச்சியை பொறுத்து அமைகிறது.வணிக வளர்ச்சி இல்லையேல் மாநில வளர்ச்சி கிடையாது. ஒரு அரசியல் கட்சி தலைவர் கூறிய கருத்துக்கு, ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தொடர் கடையடைப்பு போராட்டம் நடந்தால் மக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர்.தற்போது மத்திய, மாநில வரிகளை செலுத்த தத்தளிக்கும் வணிகர்களுக்கு இந்த செயல் மேலும் நிதிச்சுமை, பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். ஒரு கட்சி தலைவரின் கருத்தை எதிர்பார்க்கவும், கண்டிக்கவும் பல போராட்ட முறைகள் உள்ளது.பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, பந்த் போராட்டத்தை நடத்தி வணிகர்களுக்கும், மக்களுக்கும் சிரமத்தை உண்டாக்கும் செயலை அரசியல் தலைவர்கள், பிற அமைப்புகள் கைவிட வேண்டும் என சங்கம் சார்பில் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล