நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியானாவில் 37.3 சதவீதமாக உள்ள வேலைவாய்ப்பின்மை, குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் 0.4 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை குறித்த புள்ளி விவரங்களை இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) என்ற தனியார் அமைப்பு, மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக ஹரியானா மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை 37.3 சதவீதமாக உள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 32.8 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 31.4 சதவீதமாகவும் ஜார்க்கண்ட்டில் 17.3 சதவீதமாகவும் உள்ளது.

image

கேரளாவில் 6.1 சதவீதமாக உள்ள வேலையின்மை கர்நாடகாவில் 3.5 சதவீதமாகவும், தெலுங்கானாவில் 6.9 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 7.2 சதவீதமாகவும் உள்ளது.  நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை குறைந்தபட்சமாக சத்தீஸ்கரில் 0.4 சதவீதமாக உள்ளது என்று அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. அதைத்தொடர்ந்து மேகாலயாவில் 2 சதவீதமாகவும், மகாராஷ்டிராவில் 2.2 சதவீதமாகவும் வேலையின்மை விகிதம் உள்ளது. நாடு முழுவதும் மொத்தமாக வேலையின்மை விகிதம் 6.8 சதவீதமாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

இதையும் படிக்க: இன்றைய இந்தியா புதிய சிந்தனை, புதிய அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி பேச்சு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *