Loading

கடந்த 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 19 முதல் 24-ம் தேதிவரை இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 355 ரன்களும், இந்திய அணி 284 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்ஸில், 51 ரன்கள் முன்னிலை பெற்று களமிறங்கிய இங்கிலாந்து அணி, 101 ரன்களில் ஆட்டமிழந்தது. அப்போதைய அதிரடி விக்கெட் கீப்பர் ஆலன் நாட் 116 பந்துகளில் 90 ரன்கள் விளாசியதையும் மறக்க முடியாது. சுனில் கவாஸ்கர் ஒரு ஓவர் வீசி 1 ரன் கொடுத்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.

2வது இன்னிங்சில் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் சந்திர சேகர் 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக அமைந்தார். வெங்கட்ராகவன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான எட்ரிச், பிளெட்சர் இருவரையும் சந்திரசேகர் தனது மாயஜால சுழற்பந்துவீச்சால் வெளியேற்றியதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை, 173 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 101 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

லண்டனில் உள்ள இந்திய ரசிகர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செஸிங்டன் வன உயிரியல் பூங்காவில் இருந்து பெல்லா என்ற யானையை வாடகைக்கு எடுத்து அதற்கு விநாயகர் அலங்காரம் செய்து மைதானத்துக்கு அழைத்து வந்தனர். இது இந்திய அணிக்கு பெரிய ஊக்குவிப்பாக அமைந்தது, விநாயகரை நேரில் அழைத்தது வந்தது போன்ற ஒரு உணர்வு.

1971 ஒவல் வெற்றியின் ஹீரோ மாயாஜால ஸ்பின்னர் சந்திர சேகர்.

இந்த வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நினைவு விழா தொடர்பாக லண்டனில் உள்ள தாஜ் செயின்ட் ஜேம்ஸ் ஹோட்டலில் சிறப்பு நிகழ்ச்சி நடந்து. இதில் முன்னாள் இந்திய அணி வீரர் பகவத் சுப்பிரமணிய சந்திரசேகர் நேரடியாகப் பங்கேற்க முடியாவிட்டாலும், சிறப்பு வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

” 50 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி ஓவல் மைதானத்தில் பெற்ற வெற்றி பசுமையாக இருக்கிறது. இங்கிலாந்தின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை நானும், திலீப் சர்தேசாயும் பேசிவைத்து ஆட்டமிழக்க வைத்தோம். இங்கிலாந்து வீரர் ஜான் எட்ரிச் பேட்டிங் செய்ய வந்தபோது, என்னிடம் திலிப் சர்தேசாய் கூறியது இன்னும் நினைவில் இருக்கிறது.

“ஏய் சந்திரா, எட்ரிச் பேட் செய்ய வந்துள்ளார், மில் ரீப் வேகத்தில் பந்து வீசு” என்று சத்தமாகத் தெரிவித்தார். மில் ரீப் என்பது இங்கிலாந்தில் நடக்கும் குதிரைப் பந்தயப் போட்டியில் அதிவேகமாக ஓடிப் பரிசுகளை வென்ற குதிரையின் பெயர். ஆதலால், சுழற்பந்துவீச்சாளரான என்னை வேகமாகப் பந்துவீசி பேட்ஸ்மேனை ஏமாற்றிவிடு என்று மறைமுகமாகத் தெரிவித்தார்.

அதற்கு ஏற்ப நான் கூக்ளி முறையில் பந்துவீச எட்ரிச் பேட்டைத் தூக்குவதற்குள் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த பிளெட்சரும் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார்”.

இவ்வாறு பகவத் சுப்பிரமணிய சந்திரசேகர் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *