Loading

போபால்: பிரதமர் மோடியின் பிறந்தநாள் கடந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. இதை 2 வாரத்திற்கு கொண்டாடுவதற்கு பாஜ ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 15 நாட்களுக்கு பொதுமக்கள் சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்தியப் பிரதேசத்தில் பாஜ.வின் இளைஞர் பிரிவு சார்பில் தூய்மைப்படுத்தும் பணிகள் செய்யப்படுகிறது.

இதில், கட்காரி பெண்கள் பள்ளியில் ரேவா தொகுதி பாஜ எம்பி ஜனார்த்தன் மிஸ்ரா, கழிவறையை வெறும் கையால் சுத்தம் செய்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பள்ளி கழிவறையை எம்பி சுத்தம் செய்வது வரவேற்கதக்கது என்றாலும், அவர் கையுறை கூட அணியாமல் சுத்தம் செய்ததை சிலர் விமர்சித்துள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *