ரஷ்யா உக்ரைன் போர்: சர்வதேச அளவில் ஏழு மாத காலமாக பல சிக்கல்களை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யா – உக்ரைன் யுத்தம் முடிவுக்கு வருவதாக தெரியவில்லை. இரு தரப்பிலும் ஒரு சாமதானத்திற்கு நிலையில், போரின் நேரடி மற்றும் பக்க விளைவுகளை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். போர் மீண்டும் வேறொரு வடிவத்தை எடுத்து வரும் நிலையில், ரஷ்யா, வட கொரியாவிடமிருந்து ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கிகளை வாங்குகிறது என்று சில வாரங்களுக்கு முன்னதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. இது கவலைகளை மேலும் அதிகரித்த நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை தரவில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.  

உக்ரைன் மீதான போரில், ரஷ்யாவின் கைவசம் இருந்த ஆயுதங்களும், ஆயுத தளவாடங்களும் குறைந்துவிட்ட நிலையில், தாக்குதல் மேலும் நீடிக்கும் என்பதால், போருக்கு தேவையான பொருட்களை வடகொரியாவிடம் இருந்து ரஷ்யா வாங்குவதாக சந்தேகங்கள் எழுந்த நிலையில், வெள்ளை மாளிகை தனது சந்தேகத்தை அறிக்கையாக வெளியிட்டது. 

மேலும் படிக்க | நீடிக்கும் உக்ரைன் யுத்தம்; ரஷ்ய அதிபரின் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவின் சந்தேகம் வெளியிடப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, வட கொரியா தற்போது அந்த ஐயம் தேவையற்றது என தெரிவித்து இருப்பதாக அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

“நாங்கள் இதற்கு முன்பும் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்ததில்லை, இனியும் அந்நாட்டிற்கு ஆயுத ஏற்றுமதி செய்ய நாங்கள் திட்டமிட மாட்டோம்” என்று வடகொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் எழுத்துபூர்வமான அறிக்கை அளித்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA)  தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

“மில்லியன் கணக்கான ஆயுத தளவாடங்கள், ராக்கெட்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகளை வடகொரியா ஏற்றுமதி செய்திருக்கலாம்” என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்திருந்தார். 

அமெரிக்க உளவுத்துறையை மேற்கோள் காட்டி பேசிய அவர், உக்ரைனில், வடகொரியாவின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், ஆயுதங்களோ, தளவாடங்களோ உக்ரைனில் கைப்பற்றப்பட்டவில்லை  என்றும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார். எனவே, இது அமெரிக்காவில் அனுமானம் மற்றும் சந்தேகம் என்று கூறப்பட்டது. அதற்கான காரணம் ரஷ்யாவும், வடகொரியாவும் நட்பாக இருப்பதும் முக்கியமான காரணாகும்.

இது தொடர்பாக சில வாரங்களுக்கு பிறகு பதிலளித்திருக்கும் பியோங்யாங், “பிற விரோத சக்திகள், வடகொரியா மற்றும் ரஷ்யா இடையே ஆயுத ஒப்பந்தங்கள் பற்றிய வதந்தியை பரப்புகின்றன” என்று சொல்லி அமெரிக்காவுக்கு குட்டு வைத்துள்ளது.

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை நாங்கள் எச்சரிக்கிறோம் என்று கூறியுள்ள வடகொரியா, இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதும் செய்யாததும் தனது உரிமை என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறது.  

சர்வதேச அளவில் அணு ஆயுத ஒப்பந்த விஷயத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வட கொரிய அரசாங்கத்திடம் இருந்து பீரங்கி வெடிமருந்துகளை வாங்க முடிவு செய்துள்ள ரஷ்யா, ஈரானில் இருந்து இராணுவ ட்ரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தையும் மேற்கொண்டிருக்கலாம் என்று வெள்ளை மாளிகை கருதுகிறது.

ஆனால், ரஷ்யாவின் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களின் இருப்பை குறைக்கும் வகையிலும், மேலும் புதிய சரக்கை வாங்காமல் தடுக்கும் வகையிலும் மேற்கத்திய நாடுகள் பொருளாதார மற்றும் தொழில்நுட்பத் தடைகளை விதித்துள்ளன. இந்தத் தடைகளால், ரஷ்யாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, அந்நாட்டின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.  

மேலும் படிக்க | உக்ரைனில் போரினால் முடங்கிய விவசாய உற்பத்தி; வயல்களில் பொழியும் குண்டு மழை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.