பெண் மருத்துவர் ஒருவர் நள்ளிரவில் சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் 17 வயது சிறுவன் உள்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். அவர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவருடன் சினிமாவுக்கு சென்று, சினிமா முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புவதற்காக அவர் ஷேர் ஆட்டோவில் ஏறினார். அந்த ஷேர் ஆட்டோவில் உள்ள நான்கு பேர்கள் திடீரென வேறு பாதையில் ஆட்டோவை செலுத்தி, பெண் மருத்துவரை கத்திமுனையில் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்போன், தங்கச்சங்கிலி, ஏடிஎம் கார்டு ஆகியவற்றையும் பறித்து கொண்டு ஏடிஎம் கார்டில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து பெண் மருத்துவர் ஆன்லைனில் புகார் அளித்த நிலையில் வேலூர் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து ஆட்டோ டிரைவர் பார்த்திபன் (20), பாலா என்ற பரத் (19), மணி என்ற மணிகண்டன் (21), சந்தோஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 17 வயது சிறுவன் தவிர மற்றவர்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் மட்டும் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

பெண் மருத்துவர் ஒருவர் நள்ளிரவில் 17 வயது சிறுவனின் கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.