மணப்பாறை அருகே 17 வயது பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 55 வயது முதியவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் மஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (55) கூலி தொழிலாளியான இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு பள்ளி மாணவிகளை நோட்டமிட்டு வந்துள்ளார்.

அப்போது சக மாணவிகளுடன் பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற 17 வயதுள்ள 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம், வெற்றிவேல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது பெற்றோர் உதவியுடன் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

image

இதையடுத்து புகாரின் பேரில் விசாரணை மேற்கோண்ட அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையிலான போலீசார், வெற்றிவேலை போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.