நாக்பூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடந்தது. 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக தாமதமாக தொடங்கியதுடன் தலா 8 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங்கை தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய வீரர்கள் பின்ச், க்ரீன் களம்புகுந்தனர். க்ரீன் இரண்டாவது ஓவரே ரன் அவுட் செய்யப்பட, அடுத்த வந்த டாப் ஆர்டர் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். என்றாலும், பின்ச் 31 ரன்கள் சேகரித்து வெளியேறினார். கடந்த போட்டியில், சிறப்பாக விளையாடிய மேத்யூ வாட் அதே பார்மை மீண்டும் மெயின்டெயின் செய்தார். ஹர்ஷல் படேல் வீசிய இறுதி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்களை அவர் விளாச, 8 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் சேர்த்தது. அக்சர் படேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.