புதுடில்லி, :’மேற்படிப்பு மற்றும் வேலைக்காக கனடா செல்லும் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் குற்றங்களில் இருந்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை:உயர் கல்வி மற்றும் வேலைக்காக வட அமெரிக்க நாடான கனடா செல்லும் அங்கு வசிக்கும்இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிராந்திய வன்முறை மற்றும் இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல் குற்றங்களில் சிக்காமல் கவனமுடன் இருக்க வேண்டும்.

ஏற்கனவே நடந்த இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து, கனடா நாட்டு உயர் அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. கனடா சென்றுள்ளவர்கள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் ஒட்டாவா, டொரான்டோ, வான்கூவர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய துாதரகங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக துாதரகங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.