புதுச்சேரி-நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மதிய உணவு திட்ட ஊழியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் செறிவூட்டப்பட்ட உணவுகளின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரி ஓட்டல் அதிதியில் நேற்று நடந்தது. உணவு பாதுகாப்பு ஆணைய அலுவலர்கள் கண்ணன், பாலகிருஷ்ணன், ஜோஷிதா லம்பா, டாக்டர்கள் ஆல்பா காகர், ஹரிபிரியா செறிவூட்டப்பட்ட உணவுகளின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் அட்சய பாத்திரம், மதிய உணவு திட்ட குழுவினர், ஊட்டச்சத்து நிபுணர்கள், உணவியல் வல்லுனர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள், சமையல் கலைஞர் பன்னீர்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.நுண்ணுாட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள், அவற்றை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் செறிவூட்டப்பட்ட உணவு குறித்த செயல்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.