புதுச்சேரி-முதல்வர் பதவி விலக வேண்டும் என அங்காளன் எம்.எல்.ஏ., ஆவேசமாக கூறினார். சட்டசபையில் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட திருபுவை(தனி) தொகுதி, பா.ஜ., ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ., அங்காளன் நிருபர்களிடம் கூறியதாவது: திருபுவனை தொகுதியில் எந்த வளர்ச்சி பணியையும் செய்ய முடியவில்லை. இதற்கு முதல்வர் தடையாக உள்ளார். என் தொகுதியில் எந்த பணியையும் செய்யக்கூடாது என வாய்மொழியாக துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.கோவில் கமிட்டி, சொசைட்டி கமிட்டி, பால் சொசைட்டி கமிட்டி என எதிலும் என்னை கலத்தாலோசிக்காமல், என்னையும், என் தொகுதி மக்களையும் புறக்கணித்து வருகின்றார்.இதனைக் கண்டித்துதான் உண்ணாவிரதம் இருக்கின்றேன். பா.ஜ.,விற்கு ஆதரவு கொடுத்தேன் என்பதற்காவும், பா.ஜ.,ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக எனக்கு தொல்லை கொடுத்து வருகின்றார். எனவே முதல்வர் பதவி விலக வேண்டும். புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: