இளம்பெண்ணை கடத்தி கொன்ற வழக்கில் உத்தராகாண்ட் மாநிலத்தின் மூத்த பா.ஜ.க. தலைவரான வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா முதல் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 18ம் தேதி காணாமல் போனதாக கருதப்பட்ட 19 வயது இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு உத்தராகாண்ட் மாநிலத்தில் பூதாகரமாகியிருக்கிறது. அதன்படி அங்கிதா பந்தாரி என்ற அந்த பெண் ரிஷிகேஷின் லக்ஸ்மன் ஜுலா என்ற பகுதியில் புல்கித் ஆர்யா நடத்தும் ரிசார்ட்டில் ரிசப்ஷனிஸ்டாக பணியாற்றி வந்தார்.

சம்பவம் நடந்த அன்று அங்கிதா இரவு 8 மணியளவில் புல்கித் மற்றும் ரிசார்ட்டின் மேனேஜர்களான சவுரப் பாஸ்கர், அங்கித் என்கிற புல்கித் குப்தா ஆகியோரில் ரிஷிகேஷில் உள்ள ரிசார்ட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த பெண் நீங்கலாக மூவரும் கால்வாய் அருகே இருந்த சாலை ஒன்றில் இறங்கி மது குடித்திருக்கிறார்கள். அவர்கள் வரும் வரையில் அந்த பெண் காத்துக் கொண்டிருந்திருக்கிறார்.

சில நேரங்கள் கழித்து அந்த பெண்ணுக்கும், உடன் வந்த மூவருக்கும் இடையே சண்டை வெடித்திருக்கிறது. ஏனெனில் அந்த மூவரும் இளம் பெண்ணிடம் தவறாக நடந்துக்கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். இதனை அறிந்து மறுத்துள்ள அப்பெண்ணை புல்கித் உட்பட மூவரும் மிரட்டியிருக்கிறார்கள். இப்படி காரசாரமாக வாக்குவாதம் நீடித்துக் கொண்டிருந்த வேளையில் மூவரும் சேர்ந்து அங்கிதாவை கால்வாயில் பிடித்து தள்ளிவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் அங்கிதாவை காணவில்லை எனக் கூறி கடந்த செப்டம்பர் 18ம் தேதி பவுரி கர்வால் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்கள். அங்கிதாவுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தையும் அவரது தந்தை போலீசிடம் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த புகார் கடந்த செப்டம்பர் 21ம் தேதிதான் விசாரணைக்கே எடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படி இருக்கையில், நேற்று (செப்.,23) ரிசார்ட் ஓனரான பாஜக தலைவரின் மகன் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யாவும், மேனேஜர்கள் சவுரப் பாஸ்கர் மற்றும் அங்கித் குப்தா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பவ்ரி கர்வால் போலீஸ் அதிகாரி கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசியுள்ள உத்தரகாண்ட் டி.ஜி.பி. அஷோக் குமார், “கடந்த 5 நாட்களுக்கு முன் சம்பந்தபட்ட பெண் காணாமல் போயிருக்கிறார். ஆனால் சம்பவம் நடந்த பகுதி வருவாய் துறைக்கு கீழே வந்ததால் முதலில் புகார் அங்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகே லக்ஸ்மன் ஜுலா காவல் துறைக்கு கடந்த வியாழனன்று புகார் மாற்றப்பட்டிருக்கிறது. அங்கிதாவின் உடலை கண்டுபிடிக்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே பாஜக தலைவரின் மகனாக இருப்பதால் புல்கித் ஆர்யாவிடம் முதலில் வெறுமனே விசாரணை மட்டும் நடத்தப்பட்ட நிலையில், அதன் பிறகே வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரையில் கைது செய்திருக்கிறார்கள் போலீசார். விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பேசிய புல்கித் பின்னர் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் உத்தரகாண்டின் முதலமைச்சர் புஷ்கர் தாமி, மாநிலத்தில் உள்ள அனைத்து ரிசாட்டில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என மாவட்ட நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். சட்டவிரோதமாக அல்லது முறையான இணக்கம் இல்லாமல் செயல்படும் ரிசார்ட்டுகளுக்கு எதிராக கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் மேலும் உத்தரவிட்டிருக்கிறார்.

இதற்கிடையே இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என உத்தரகாண்ட் மாநில மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் புல்கித் ஆர்யாவின் ரிசார்ட்டையும் சேதப்படுத்தியிருக்கிறார்கள். இதனையடுத்து முதலமைச்சர் புஷ்கர் தாமியின் உத்தரவின் பேரில் புல்கித் ஆர்யாவின் ரிசார்ட் இடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *