புதுச்சேரி-மத்திய அரசை கண்டித்து பெரியார் தி.க., உள்ளிட்ட அமைப்புகள் புதுச்சேரியில் வரும் 26 ம் தேதி பந்த் அறிவித்துள்ளன.புதுச்சேரி ராஜா நகரில், பல்வேறு இயக்கங்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வரும் 26ம் தேதி மத்திய பா.ஜ., அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்போராட்டத்திற்கு பெரியார் தி.க., திராவிடர் விடுதலைக் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், இந்திய கம்யூ., (எம்.எல்), எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட 32 அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.ஏற்கனவே ஹிந்துக்களை இழிவாக பேசிய தி.மு.க., எம்.பி., ராசா மீது மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் வரும் 27 ம் தேதி ‘பந்த்’ அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.