ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர், எந்த ஒரு பெண்ணுமே செய்யத் துணையாத ஒரு செயலை செய்துள்ளார்.ஆம் அவர் தனது கணவரை அவரது முன்னாள் காதலியுடன் சேர்த்து வைத்துள்ளார். கேட்பதற்கு திரைப்படக் கதை போல் உள்ளதா.. ஆனால், இது உண்மை சம்பவம். ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கல்யாண். டிக் டாக் மூலம் பிரபலமான அவர், சில ஆண்டுகளுக்கு முன் கடப்பாவைச் சேர்ந்த விமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின் இருவரும் டிக் டாக் வீடியோக்களில் நடித்து பிரபலமாகினர்.

இந்த நிலையில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் விமலாவை சந்தித்துள்ளார். அப்போது கல்யாணை ஏற்கெனவே காதலித்து வந்ததாகவும், இருவரும் சேர்ந்து டிக்டாக் வீடியோக்கள் செய்து வெளியிட்டதாகவும், சில காரணங்களால் தங்கள் காதல் முறிந்து விட்டதாக விமலாவிடம் கூறியுள்ளார். அத்துடன் தங்களைச் சேர்த்து வைக்குமாறு விமலாவிடம் நித்யாஸ்ரீ கெஞ்சியுள்ளார்.

மேலும் படிக்க | வரமல்ல … சாபம்… ரூ 25 கோடி லாட்டரி வென்ற நபரின் புலம்பல்!

இதுகுறித்து தனது கணவர் கல்யாணிடம் விமலா கூறியுள்ளார். அதனால் நித்யாஸ்ரீயுடன் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து திருப்பதியில் கல்யாண்- நித்யாஸ்ரீ இருவருக்கும் விமலா முன் நின்று நேற்று திருமணம் செய்து வைத்தார். தனது கணவனுக்கு அவரது முன்னாள் காதலியை திருமணம் செய்து வைத்து அவர்களுடன் விமலா எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க: நிதிஷ் ஜி எங்களுடன் கைகோர்த்தது பாஜகவுக்கு முகத்தில் அறைந்தது போல உள்ளது -தேஜஸ்வி யாதவ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.