பாலக்கோட்டில் சினிமா பாணியில் 1 கோடி ரூபாய் பணம் கேட்டு கல்லூரி மாணவனை கடத்திய 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெருவைச் சேர்ந்தவர் பைனான்ஸ் அதிபர் சிவக்குமார். இவரது மகன் சாம்சரண் (17) திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த சாம்சரண் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.

image

அப்போது மர்ம நபர்கள் சிலர் சொகுசு காரில் அவரை கடத்திச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாம்சரணின் தந்தை சிவக்குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உன் மகனை கடத்தியுள்ளோம், ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்தால், ஒப்படைப்போம். பணம் தராவிட்டால் பையனை கொன்று விடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார், பாலக்கோடு டி.எஸ்.பி சிந்துவிடம் ரகசியமாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் டி.எஸ்.பி. சிந்து தனிப்படை அமைத்து, செல்போன் சிக்னலை வைத்து தீவீரமாக தேடியுள்ளனர். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடத்தப்பட்ட மாணவனை, கடத்தல் கும்பலுடன் காவல் துறையினர் சுற்றி வளைத்து சாம்சரணை மீட்டனர்.

image

இந்த கடத்தில் சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரரான ரித்தீஷ்குமார் (23) என்பவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், மாணவனை, பணத்திற்காக கூட்டாளிகள் ஆறு பேர் உதவியுடன் கடத்தியது உறுதியானது. இதனைத் தொடர்ந்து சதீஷ்குமாரின் கூட்டாளிகளான அருண்குமார் (33) விஜி (30), சந்தோஷ் (22), முரளி (32), முருகேசன் (38), கோகுல் (30), உள்ளிட்ட 7 பேரிடமும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: