நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். அவரது கணவர் கேரள மாநிலம் அம்புரி பகுதியை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு 15 வயதில் மகளும், 14, 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். அந்த பெண் தனது 3 குழந்தைகளுடன் பத்துகாணி பகுதியில் உள்ள 58 வயதான தாயாரின் வீட்டில் வசித்து வந்தார்.

அப்போது கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த டிஜேஷ் என்ற உண்ணி என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பிறகு டிஜேஷ் அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்கி குடித்தனம் நடத்தினர். மேலும், பெண்ணின் தாய் மற்றும் 3 குழந்தைகளையும் டிஜேஷ் பராமரித்து வந்தார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நெருங்கி பழகிய விவகாரம் டிஜேசுக்கு தெரிய வந்தது. உடனே கள்ளக்காதலியிடம் அதுபற்றி கேட்டு தகராறு செய்துள்ளார். இதையடுத்து, அந்த இளம்பெண் 2வது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

இருப்பினும் டிஜேஷ் வேலைக்கு சென்று கள்ளக்காதலியின் தாய் உள்பட 3 குழந்தைகளையும் கவனித்து வந்து உள்ளார். ஒரு கட்டத்தில் டிஜேசுக்கு கள்ளக்காதலியின் 15 வயது மகள் மீது ஆசை வந்துள்ளது. சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, பாட்டியிடம் நடந்ததை கூறினார். ஆனால் அவரோ, இந்த சம்பவத்தை வெளியே கூறினால் வெட்கக்கேடு. டிஜேஷ் தான் நமக்கு தேவையான உதவி செய்து வருகிறார்.

எனவே அவரை பகைத்துக் கொள்ளாதே என கண்டித்துள்ளார். இதனால் சிறுமியும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டிஜேஷ் கடந்த 4 மாதங்களாக சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அதேபோல் சிறுமியின் 14 வயது தம்பியிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார். இந்த நிலையில் சிலதினங்களுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தபோது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் இதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேலும் டிஜேசை அவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த டிஜேஷ் அந்த பெண்ணிடம் தகாத வார்த்தைகள் பேசியுள்ளார். இதையடுத்து அந்த பெண், சிறுமியை அழைத்துகொண்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு போனார். அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறியபடி புகார் அளித்தார். இதுகுறித்து டிஜேஷ் மற்றும் சிறுமியின் பாட்டி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக சிறுமியின் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் டிஜேஷ் கேரளாவுக்கு தப்பி சென்றுவிட்டார்.

அந்த வீட்டில் இருந்த சிறுமியின் பாட்டியை, பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய டிஜேசை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: