தினேஷ் கார்த்திக்கை பினிஷர் என்று முத்திரை குத்தி அக்சர் படேலுக்கு பின்னால் எல்லாம் இறக்குவது அபத்தம் என்று கூறும் கவாஸ்கர் அவரை 12-13 ஓவர்களில் இறக்க வேண்டும் என்கிறார்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஃபினிஷராக இருந்த தினேஷ் கார்த்திக், 2022 ஐபிஎல் தொடரின் பின்னணியில் தனது சர்வதேச கிரிக்கெட் கரியரைப் புதுப்பித்துக் கொண்டார். அவர் சொன்னதைப் போலவே  இந்திய T20I அணிக்கு மீண்டும் திரும்பினார், இறுதியில் உலகக் கோப்பை அணியிலும் தேர்வு செய்யப்பட்டார்.

ஏற்கெனவே கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியது போல் பினிஷர்னா கடைசி 4 ஓவர்களில் இறங்குபவர் அல்ல, 9-10, அல்லது 12-13 ஓவர்களில் இறங்கி மேட்சை வெற்றிகரமாக பினிஷ் செய்து கொடுப்பவர் என்று விளக்கம் அளித்து கார்த்திக்கை பினிஷர் அல்ல என்றார்.

கவாஸ்கரும் அவரை அடியொட்டி தினேஷ் கார்த்திக்கை பினிஷர் என்று முத்திரைக் குத்தி எதற்காக அவரை அக்சர் படேலுக்குப்பிறகு இறக்க வேண்டும், 17 ஓவர்கள் வரை அவரை இறக்கக் காத்திருக்க வேண்டும், 12-13 ஓவர்களில் இறக்க வேண்டியதுதானே, சூழ்நிலைக்குத் தக்கவாறு பேட்டரைக் களமிறக்குவதா,இல்லை அவர் பினிஷர் அதனால் 9 விக்கெட் போனாலும் 18வது ஓவரில்தான் இறக்க வேண்டும் என்று நியதியா என்று சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Also Read: ‘ஆல் டைம் கிரேட்’ ரோஜர் பெடரர் பங்கேற்கும் கடைசி டென்னிஸ் தொடர் – நாளை லண்டனில் தொடக்கம்

“அக்‌ஷர் படேலை விட தினேஷ் கார்த்திக் பெட்டர் பேட்ஸ்மேன் என்று நினைத்தால் கார்த்திக்கை 12-13வது ஓவராக இருந்தாலும் இறக்க வேண்டியதுதானே என்ன கெட்டு விடும். கடைசி 3-4 ஓவர்கள்தான் அவருக்கு என்றெல்லாம் ஒதுக்கி விடுவது ஒன்றுமில்லாமல் போய் விடும். நாம் ஒரு கோட்பாட்டை வைத்துக் கொண்டு அதன் படி செயல்படக்கூடாது .

 

இங்கிலாந்திடமிருந்து கற்று கொள்ள வேண்டும் அவர்கள் இப்போது எவ்வளவு சுதந்திரமாக ஆடுகிறார்கள்.இங்கிலாந்து கிரிக்கெட்டின் வித்தியாசத்தை பாருங்கள், முடிவுகளையும் பாருங்கள். எனவே கோட்பாடுகளின் பிடியில் சிக்க வேண்டாம்.நடைமுறையில் என்ன தேவையோ அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும், என்கிறார் சுனில் கவாஸ்கர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.