இரானில், `எல்லா நேரங்களிலும் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தலைமுடியை முழுதும் மறைக்கும் வகையில் கட்டாயம் ஹிஜாப்பை அணிய வேண்டும்’ என்று அரசு கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. இதன் காரணமாக, இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு அந்த நாட்டுப் பெண்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

மேலும், அரசின் புதிய ஆடைக் கட்டுப்பாடு விதியை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி அண்மையில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட 22 வயது மஹ்சா அமினி (Mahsa Amini) என்ற பெண், கடந்த வெள்ளியன்று போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு, இவரை பேட்டி எடுக்க, தனியார் தொலைக்காட்சி ஒன்று பிரத்யேக தயாரிப்புகளோடு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது. ஆனால், இப்ராஹிம் ரெய்சி நெறியாளர் ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி அந்த நேர்காணலை தவிர்த்திருக்கிறார்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி
இன்ஸ்டாகிராம்

இது தொடர்பக ஊடகவியலாளர் கிறிஸ்டியன் அமன்பூர் தனது ட்விட்டர் பதிவில், “​​அமெரிக்க மண்ணில் இரானிய அதிபரின் முதல் நேர்காணல் இதுவாகும். அதனால், வாரக்கணக்கில் திட்டமிட்டு, நேர்காணல் அன்று எட்டு மணிநேரமாக மொழிபெயர்ப்பு உபகரணங்கள், விளக்குகள் மற்றும் கேமராக்களை அமைத்து நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் அதிபர் ரெய்சி வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதிபர் நேர்காணலுக்கு வருவதற்காக 40 நிமிடங்கள் காத்திருந்தேன். ஆனால் அவர் நேர்காணலை ரத்து செய்துவிட்டார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.