வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத்துடன் இணைந்திருக்கிறார் அஜித். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் மூலம் தன்னை வினோத் நிரூபித்தவர் என்பதால் வலிமை மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஒர்க் அவுட் ஆகவில்லை. வலிமை இப்படி வலுவற்று போனதற்கு ஏகப்பட்ட பேரின் தலையீடுதான் காரணம் என தகவல் பரவியது.

இந்தச் சூழலில் வினோத்துடன் மீண்டும் இணைந்திருக்கும் படம் க்ரைமை அடிப்படையாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. க்ரைம் சப்ஜெக்ட்டிலும் அதற்கான டீட்டெயிலிங்கிலும் வினோத் அட்டகாசம் செய்பவர் என்பதால் இந்தப் படம் நிச்சய்ம் பந்தயம் வெல்லும் என்கின்றனர் அஜித்தின் ரசிகர்கள். இப்படிப்பட்ட நிலையில் படத்தின் பெயர் குறித்து எந்தத் அப்டேட்டும் இல்லாமல் இருந்தது.

Ajith

நேற்று முன்தினம் (செப் 21) படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், பெயரும் வெளியிடப்பட்டது. அதன்படி படத்துக்கு ‘துணிவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார். அதனை உறுதிப்படுத்தும்விதமாகத்தான் ஃபர்ஸ்ட் லுக்கும் இருந்தது. 

மேலும் படிக்க | தளபதி 67-ல் சிம்பு பட இயக்குநர்: விக்ரம் இயக்குநரின் பலே பிளான்

இதற்கிடையே படம் வங்கிக்கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த வங்கிக்கொள்ளை உண்மை சம்பவம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1987ஆம் ஆண்டு துப்பாக்கிகளுடன் 15 பேர் காவல் துறையினர்  கெட்டப்பில் வங்கியைக் கொள்ளையடித்தனர். அப்போது  4.5 மில்லியன் டாலர்களுடன் அவர்கள் தப்பினார்கள். இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை என கருதப்படுகிறது.இந்த சம்பவத்தை தழுவிதான் `துணிவு’ எடுக்கபட்டிருப்பதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.

Thunivu

தீரன் படம் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது. அதேபோல் தற்போது துணிவு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுபோன்ற களத்தில் வினோத் கிங் என்பதால் துணிவு படம் மாபெரும் வெற்றியடையும் என கருதி குஷியில் இருக்கின்றனர் ஏகே ரசிகர்கள்.

மேலும் படிக்க | மீண்டும் போஸ்டர் சண்டையில் இறங்கிய விஜய் – அஜித் ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.