`வலிமை’க்குப் பிறகு அஜித் மூன்றாவது முறையாக வினோத்தின் இயக்கத்தில் நடித்து வருகிறார். `சதுரங்க வேட்டை’, `தீரன் அதிகாரம் ஒன்று’ என படங்களின் மூலம் தனித்தன்மையை நிரூபித்த வினோத்தின் மீது ‘வலிமை’யில் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால், பலரது தலையீடு மற்றும் கொரோனா சூழலால் எதிர்பார்த்தபடி படம் அமையவில்லை (`நேர் கொண்ட பார்வை’ ரீமேக் என்பதால் அதை பேச வேண்டியதில்லை). அடர்த்தியான கதை, புருவம் உயர்த்தும் சம்பவம், போலீஸ் ஸ்டோரி இதெல்லாம் ஹெச். வினோத்தின் அசைக்க முடியாத பலம் என ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் அவர் நிரூபித்தார். ஆகையால், இம்முறை தன்னை மீண்டும் நிரூபிக்கவே உண்மை சம்பவம் ஒன்றை கையிலெடுத்திருக்கிறார் என்ற பேச்சு, அப்போது ஓடியது.

அஜித் - ஹெச்.வினோத்

அஜித் – ஹெச்.வினோத்

அதனால்தான் வங்கிக் கொள்ளை பற்றிய கதையை எடுக்கிறார் என்றார்கள். `துணிவு’ கதையாக சொல்லப்படும் லூதியானா வங்கிக் கொள்ளை குறித்து பார்க்கலாம். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1987ல் நடந்த உண்மை சம்பவம் இது. சண்டிகரில், இந்தியா – சீக்கிய துப்பாக்கிகளுடன் போலீஸ் அதிகாரிகள் போல் உடையணிந்து வந்து வங்கியைக் கொள்ளையடித்துள்ளனர். அங்கே 4.5 மில்லியன் டாலர்களுடன் தப்பினார்கள். இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வங்கிக் கொள்ளை அப்போது இந்தியாவே அதிர்ச்சியடைந்தது. இந்த சம்பவத்தை தழுவிதான் `துணிவு’ எடுக்கபட்டு வருகிறது என்றும், கொள்ளையடித்தவர்கள் பாங்காக்கிற்குத் தப்பிச் செல்வது போலவும் அங்கே அஜித் அவர்களை வேட்டையாடுவதாகவும் கதை நீள்கிறது. வில்லன், ஹீரோ என அஜித் இரண்டு ரோலில் நடித்து வருகிறார். ஹீரோ போலீஸ் அதிகாரி என்றும் சமுத்திரக்கனி சக போலீஸ் ஆக நடிப்பதாகவும் சொல்கிறார்கள்.

சமுத்திரகனியுடன்

சமுத்திரகனியுடன்

அஜித் நெகட்டிவ் ஷேடில் ஒரு ரோலில் நடிப்பதை அவர் உறுதிப்படுத்தியிருந்தாலும், கதையின் திருப்புமுனை கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக சொல்கிறார்கள். `கே.ஜி.ஃப் 2’வில் வில்லனாக அவர் மிரட்டியதை தொடர்ந்தும், இந்தி பிசினஸைக் கருத்தில் கொண்டும் சஞ்சய்தத்தைக் கமிட் செய்ய தென்னிந்திய இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய்- லோகேஷின் `விஜய்67′ படத்திலும் அவர் இருக்கிறார் என்றாலும், அஜித்தின் `துணிவு’ தான் அவருக்கு தமிழில் முதல் படமாக இருக்கும் என்கிறார்கள்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.