மாநாட்டில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்திய நிதியமைச்சர் அமைச்சர், “விவசாயிகள் அதிக வருவாய் பெற்று நுகர்வோருக்கு குறைந்தபட்ச விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதே நமது மாநில அரசின் நோக்கமாக இருக்கிறது. பெரு விவசாயிகளுக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது.

சிறு விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. ஆனால், உண்மையில் இடைத்தரகர்கள் தான் அதிக லாபம் பெறுகின்றனர். இஸ்ரேல் நாட்டில் இருப்பதை போன்ற தோட்டக்கலைத்துறை தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் அதிக பலன் பெரும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இவற்றை சீர் செய்ய மாநில அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

உபாசி மாநாடு

உபாசி மாநாடு

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளால் வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்கு வழிவகை செய்கிறது. அரசின் திட்டங்கள் தற்போது துறை ரீதியாக இருக்கிறது. இவற்றை பயனாளிகள் ரீதியாக மாற்றி செயல்படுத்த நமது அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் தமிழகம் இந்த நடவடிக்கைகளில் முன்னோடியாக திகழ்கிறது. இருப்பினும் நமது தகுதிக்கு ஏற்ப நாம் இன்னும் இலக்கை எட்டவில்லை. நமது பட்ஜெட் ரூ.4 லட்சம் கோடியாக இருக்கிறது. காலநிலை மாற்றம், இறக்குமதி விதிமுறைகள், தொழிலாளர்கள் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தோட்டக்கலைத்துறைக்கு அரசு உதவ வேண்டும். குறைவான விலை, சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள போட்டி ஆகியவற்றால் தோட்டக்கலைத்துறை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்டத்துறைக்கு மாநில அரசு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.