Loading

2022-23 கல்வியாண்டிற்க்கான பி.எட் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இணையவழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் தேதி மற்றும் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பி.எட் படிப்புகளுக்கு  விண்ணப்பிக்க நாளை முதல்  அக்டோபர் 3ம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 6ம் தேதி ரேங்க் பட்டியலும் அக்டோபர் 12ஆம் தேதி கலந்தாய்வு துவங்கும் என்றும் தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்வியியல் கல்லூரிகளில் தமிழ்/உருது, கணிதம், ஆங்கிலம், பொருளியல், வணிகம், அரசியலறிவு உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் பிஎட் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

மேற்காணும் படத்தில், முதல் 10 பாடப் பிரிவுகளுக்கு, தொடர்புடைய துறைகளில்  இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் பிஎட் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். 11 முதல் 19 வரையிலான பாடங்களுக்கு முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

மேலும், இணையான படிப்புகள்  என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலை  முடித்திருந்தாலும், தொடர்புடைய படிப்புகளில் B.Ed.,-ல் சேரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பொதுப் பிரிவினர்   விழுக்காடு மதிப்பெண் 50%-ம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 45% பெற்றும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 43% பெற்றும், பட்டியல் வகுப்பினர் 40% மதிப்பெண் பெற்றும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் இளநிலைப் பாடத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலே போதுமானதாக கொள்ளப்படும்.

அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு முறை  பின்பற்றப்பட உள்ளது. இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.

அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர www.tngasaedu.in இணையதளத்தை அணுகலாம்.  தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும், சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *