புதுச்சேரி-நீட் தேர்ச்சி பட்டியலில் புதுச்சேரி குடியுரிமை உள்ள மாணவர்களை மட்டுமே இடம் பெற செய்ய வேண்டும் என மாணவர் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க தலைவர் பாலா விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற்று 2 மாதமாகியும் இன்னும் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் உள்ளது.தற்போது எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வரும் சூழ்நிலையிலும் இன்னும் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் உள்ளது.’நீட்’ தேர்வில் இந்தாண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று டாக்டர் கனவில் உள்ளனர். எனவே தனியார் மருத்துவ கல்லுாரிகளுடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்தி கல்வி கட்டணத்தையும், அரசு ஒதுக்கீட்டு இடங்களையும் இறுதி செய்ய வேண்டும்.தேசிய தேர்வு முகமையிடம் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியலை விரைவாக பெற வேண்டும். அந்த பட்டியலை நன்கு ஆராய்ந்து, புதுச்சேரியில் குடியுரிமை உள்ள உண்மையான மாணவர்களுக்கு மட்டுமே இடம் பெற செய்ய வேண்டும். இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் உதயகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published.