ஸ்ரீசாயி மகாசமாதி தினமான விஜயதசமியில் ஆக்டோபர் 5-ம் தேதி புதன்கிழமை அன்று சக்திவிகடனும் துவாரகாமயி ஆத்ம ஞானியர் மையமும் இணைந்து ஸ்ரீசாயி சங்கல்ப சிறப்பு பூஜையை நடத்த இருக்கிறோம்.

ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை

ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை

“ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:

ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:

ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:

ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:

ஓம் சேஷ சாயினே நம:

ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:

ஓம் பூதாவாஸாய நம:

ஓம் காலாதீதாய நம:

ஓம் காலாய நம

ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:

ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:”

மனமுருகி கூப்பிட்டவுடனே வந்து நிற்கும் பரமதயாளன் ஸ்ரீசாயி. எவராலும் அறியமுடியாத வகையில் அவதரித்து மராட்டிய மாநிலம் சீரடியில் தங்கியிருந்து பஞ்சமும் பசியுமாய் இருந்த பாரத பூமியை தனது தவசக்தியால் கருணை மிகுந்த சோலைவனமாக மாற்றியவர் பாபா. கருமையும் அன்பும் கொண்ட சாயிபகவான் இறுதி வரை தனது நல்லாசிகளை எல்லோருக்கும் வழங்கினார். இன்றும் அவரது தெய்வீக ஆற்றலும், கருணையும் சீரடி எனும் சின்னஞ்சிறிய கிராமத்திற்கு எல்லோரையும் வரவழைத்துக் கொண்டே இருக்கிறது. தன்னைத் தேடி வர முடியாதவர்களுக்குக் கூட தனது ஸித்திகளால் பல நன்மைகளை செய்துள்ளார் சாயிபாபா. சுமார் 60 ஆண்டு காலம் சீரடியில் வாழ்ந்த பகவான் 1918-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு விஜயதசமி நாளில் தனது மானிட தேகத்தை விடுத்து எங்கும் நிறைந்த பேராற்றலாக ஸித்தி அடைந்தார்.

ஒரு கணம், ஒரே ஒரு கணம் உண்மையாக பாபாவை நம்பி அழைத்துப் பாருங்கள். நிச்சயம் உங்கள் இல்லம் தேடி பாபா வருகை புரிவார். உண்மை, நம்பிக்கை, பொறுமை, கருணை, அர்ப்பணிப்பு கொண்டவர்களை அந்த பேராற்றல் கொண்ட பகவான் கைவிடுவதே இல்லை. நம்பிக்கையோடு பாபாவைப் பின் தொடருங்கள். உங்களுக்கு எது நன்மையோ அதை, அதற்குரிய காலத்தில் நிச்சயமாகத் தருவார் பாபா.

“அன்போடும், உண்மையோடும் என்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோருக்கும் நான் பக்கத்திலேயே இருக்கிறேன். எனக்குப் பிரியமாக நடப்பவர்களின் விருப்பத்தைக் கேட்டு அதன்படி செய்தும் கொடுப்பேன். அவர்கள் அழைக்கும்போதல்லாம் ஓடி வந்து காப்பேன். நான் செய்யும் அற்புதங்கள் பக்தர்களால் பேசப்படும். துன்பத்திலும், பயத்திலும், பிரச்னையிலும் வாடும் அனைவரையும் காக்கவே எப்போதும் சூட்சுமமாக இருந்து வருகிறேன். நம்பிக்கையோடு இருங்கள் இப்போதும் உங்கள் பிரார்த்தனைகள் கேட்கப்பட்டது.”

ஓம் ஸ்ரீசாய்ராம்

ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை

ஸ்ரீசாயி சங்கல்ப பூஜை

ஸ்ரீசாயி மகாசமாதி தினமான விஜயதசமியில் ஆக்டோபர் 5-ம் தேதி புதன்கிழமை அன்று சக்திவிகடனும் துவாரகாமயி ஆத்ம ஞானியர் மையமும் இணைந்து ஸ்ரீ சாயி சங்கல்ப சிறப்பு பூஜையை நடத்த இருக்கிறோம்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த மகா ஆராதனை விழாவில் நீங்களும் கலந்து கொண்டு எல்லா நலமும் வளமும் பெற வேண்டுகிறோம். சென்னை புழுதிவாக்கத்தில் அமைந்துள்ளது துவாரகாமாயி ஆத்மஞானியர் மையம். இங்கு ஸ்ரீசாயி மகாசமாதி தினமான விஜயதசமியில் மகாஆராதனைகளும் தீபாராதனையும் நடைபெற உள்ளது. சீரடியில் இருந்து வரும் பாபாவின் திருப்பாதுகை பிரதியும் சந்தான பாபாவும் உங்களுக்கு அருள காத்திருக்கிறார்கள். திருப்பாதுகை அபிஷேகம், மகாஆரத்தி, பஜன், சாயி சரித பாராயணம், சங்கல்ப பூஜைகள், பல்லக்கு உற்சவம் என பல்வேறு ஆராதனைகளும் இந்த விசேஷ விழாவில் நடைபெற உள்ளன. மேலும் ‘பாபா மாமி’ ரமா சுப்பிரமணியம் ஶ்ரீசாயி நாதனின் மகிமையை விளக்கி அற்புதமான ஓர் உரையும் நடத்த உள்ளார்கள். பங்கு கொள்ளவிருக்கும் பக்தர்களுக்கு நைவேத்தியம், பிரசாதம், அன்னதானமும் அளிக்கப்பட உள்ளது.

ஸ்ரீசாயி சங்கல்ப சிறப்பு பூஜை

ஸ்ரீசாயி சங்கல்ப சிறப்பு பூஜை

சென்னை, புழுதிவாக்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்து கொண்ட நம் வாசகர்கள் பெயர், நட்சத்திரம், பிரார்த்தனையோடு சிறப்பு சங்கல்பம் செய்யப்படும். சாயிநாதர் தாய்க்கு நிகரானவர். ஒரு தாய் தன் குழந்தையை எப்படி ஒடிச்சென்று காக்கிறாளோ, அப்படியே சாயியும் தன் பக்தர்களைக் காப்பார். நம்பிக்கையோடு இந்த மகா ஆராதனையில் கலந்து நீங்கள் விரும்பிய வேண்டுதலை அடையுங்கள். உங்களின் எல்லா விருப்பங்களும் நிறைவேற நாங்களும் வேண்டிக் கொள்கிறோம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஆராதனையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹301/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஊதி பிரசாதம்+சாயி ரட்சை+பாபா படம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறி முறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *